Latest News :

உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம்! - ’சார்பட்டா பரம்பரை’ படத்திற்கு கிடைத்த பெருமை
Sunday December-19 2021

ஒரு திரைப்படம் வெற்றி பெற பலர் கடுமையாக உழைக்கிறார்கள். அதிலும் உதவி இயக்குநர்களின் உழைப்பு மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. ஆனால், அவர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் அங்கீகாரம் கிடைப்பதில்லை. தற்போது இந்த குறையை போக்கும் விதமாக, இந்திய சினிமாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு கோலிவுட்டில் நடைபெற்றுள்ளது.

 

கடந்த 5 வருடங்களுக்கு முன்பு உதவி இயக்குநர் சக்தி என்பவரால் தொடங்கப்பட்டது ‘டைரக்டர்ஸ் கிளப்’ (Directors Club) என்ற வாட்ஸ் அப் செயலி குழு. தமிழ் திரையுலகில் உதவி இயக்குநர்களாக பணியாற்றி வருபவர்கள் இணைந்துள்ள இக்குழுவில் இயக்குநர்கள் மணிரத்னம், எஸ்.எஸ்.ராஜமவுலி, ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், நடிகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சினிமாவின் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் இக்குழுவில் உதவி இயக்குநர்களுடன் கலந்துரையாடி தங்களது அனுபவங்களை பகிர்ந்துக்கொள்வதோடு, அவர்களுடைய சந்தேகங்களையும் தீர்த்து வைத்துள்ளனர்.

 

அதன்படி, உதவி இயக்குநர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும், உற்சாகமும் தன்னம்பிக்கையும் அளிக்கும் களமாகவும் விளங்கும் டைரக்டர்ஸ் கிளப் குழு 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

 

இதனை கொண்டாடும் விதத்தில், டைரக்டர்ஸ் கிளப் நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா கடந்த 17 ஆம் தேதி சென்னை ராணி சீதை அரங்கில் கொண்டாடப்பட்டது. இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, நடிகர் காளி வெங்கட் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

இந்த விழாவில் உதவி இயக்குநர்களை கெளரவிக்கும் வகையில் விருதுகள் வழங்கப்பட்டது. முன்னதாக, 2020 மற்றும் 2021 ஆண்டில் வெளியான திரைப்படங்களில் ஒரு சிறந்த படத்தை டைரக்டர்ஸ் கிளப் உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அதில் பணியாற்றிய உதவி இயக்குநர் குழுவிற்கு விருது வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

 

அதன்படி, போட்டியில் பங்கேற்ற திரைப்படங்களில் பா.இரஞ்சித் இயக்கிய ‘சார்பட்டா பரம்பரை’ படம் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதை தொடர்ந்து விழாவில் ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படத்தில் பணியாற்றிய உதவி இயக்குநர்கள் குழுவுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. 

 

Directors Club

 

நிகழ்ச்சியில் நடைபெற்ற சி.எஸ்.ஐ காது கேளாதோர் பள்ளி சார்பில் வாய் பேச முடியாத மற்றும் காது கேளாத குழந்தைகள் நடத்திய நாட்டிய நிகழ்வு அனைவர் மனதையும் கவர்ந்தது. 

 

உதவி இயக்குநர்களுக்கான இலவச பயிற்சி பட்டறையாகவும், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் களமாகவும் செயல்பட்டு வரும் டைரக்டர்ஸ் கிளப் அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related News

7943

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery