Latest News :

நடிகையானார் இயக்குநர் பேரரசு மகள்! - குவியும் பாராட்டுகளும், பட வாய்ப்புகளும்
Monday December-20 2021

தமிழ் சினிமா இயக்குநர்கள் பலர் தங்களது வாரிசுகளை நடிகர்களாக்கி வருவது புதிதல்ல என்றாலும், தற்போது பல இயக்குநர்கள் தங்களது மகள்களை நடிகைகளாக களம் இறக்கி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மாஸ் இயக்குநரான பேரரசுவின் மகள் சுகிஷா ‘மின்மினி’ என்ற படத்தில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

 

அறிமுக இயக்குநர் ராஜ்விக்ரம் இயக்கத்தில், செல்வம் பொன்னையன் தயாரிப்பில் உருவான ‘மின்மினி’ திரைப்படம் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

 

அப்பா - மகள் இடையே இருக்கும் பாசப்போராட்டம் மற்றும் குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் இயக்குநர் பேரரசுவின் மகள் சுகிஷாவின் நடிப்பை பார்த்து பலர் பாராட்டி வருகிறார்கள். குறிப்பாக இயக்குநர்கள் பலர் சுகிஷாவின் நடிப்பை பாராட்டுவதோடு, அவரை தங்களது படங்களில் நடிக்க வைப்பதற்காக பேச்சுவார்த்தையும் நடத்தி வருகிறார்கள்.

 

மகள் நடிகையானது குறித்து இயக்குநர் பேரரசுவிடம் கேட்டதற்கு, “’மின்மினி’ படத்தில் நான் பாடல் எழுத வேண்டும், என்று தான் படக்குழு என்னை அனுகினார்கள். அவர்கள் என் அலுவலகத்திற்கு வந்த போது என் மகள் அங்கிருந்தார். அவரை பார்த்தவர்கள், தங்களது படத்தின் கதையை சொல்லி, உங்கள் மகள் பொருத்தமாக இருப்பார் நடிப்பாரா, என்று கேட்டார்கள். நானும் மகளிடம் கேட்டதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார். அப்படிதான் இந்த படத்தின் வாய்ப்பு என் மகளுக்கு கிடைத்தது.

 

மகளுக்கு விருப்பம் இருந்ததால், நடிக்க நான் சம்மதம் சொல்லிவிட்டேன். ஆனால், அவர் எப்படி நடிப்பார், என்ற பயம் எனக்கு இருந்துக்கொண்டே இருந்தது. ஆனால், படப்பிடிப்புக்கு சென்று அவர் நடித்த சில காட்சிகளை பார்த்த போது, என் மகள் எனக்கு பெருமை சேர்ப்பாள் என்று தெரிந்துவிட்டது. எனக்கே ஆச்சரியம் ஏற்படும் வகையில் அவரது நடிப்பு இருந்தது. தற்போது படம் வெளியாகிவிட்டது. படத்தை பார்த்து பாராட்டும் அனைவரும் என்னை தொடர்பு கொண்டு என் மகளின் நடிப்பு சிறப்பாக இருப்பதாக பாராட்டி வருகிறார்கள். அவருக்கு வாய்ப்புகளும் வர தொடங்கியுள்ளது. அதனால் அவருடைய நடிப்பு பயணம் தொடரும்.” என்று கூறியவர், தனது மகள் கதாநாயகியாக விரைவில் களம் இறங்க இருப்பதாகவும், அவருக்காக தானே ஒரு கதை தயார் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

 

முதல் படம் அனுபவம் குறித்து கூறிய சுகிஷா, “சின்ன வயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அதை அப்பாவிடம் காட்டிக் கொள்ளவில்லை. இந்த படத்தின் வாய்ப்பு வந்த போது உடனே சம்மதித்து விட்டேன். நான் நடிக்கிறேன் என்ற போது அப்பா எதுவும் சொல்லவில்லை. உனக்கு எது விருப்பமோ அதை செய், ஆனால் நன்றாக செய், என்று மட்டும் தான் சொன்னார். தற்போது எனக்கு கிடைத்து வரும் பாராட்டுகளின் மூலம் நான் அப்பாவின் பெயரை காப்பாற்றி விட்டேன், என்று நினைக்கிறேன். தொடர்ந்து நடிப்பேன், கதாநாயகியாகவும் நடிப்பேன்.” என்றார்.

 

Minmini

 

‘மின்மினி’ படத்தின் இயக்குநர் ராஜ்விக்ரம் கூறுகையில், “’மின்மினி’ திரைப்படம் வெளியாகி மக்களிடம் வரவேற்பு பெற்றிருக்கிறது. படத்தை பார்க்கும் ரசிகர்களின் பாரட்டுகள் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்திருக்கிறது. படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குநர் பேரரசு சாரின் மகள் சுகிஷாவின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். அவர் நிச்சயம் மிகச்சிறந்த நடிகையாக தமிழ் சினிமாவில் இடம் பிடிப்பார்.

 

தற்போதைய காலக்கட்டத்தில் மனித உறவுகளின் மகத்துவம் மறக்கடிக்கப்பட்டுள்ளது. வேகமான மனித வாழ்க்கையில் மனித உறவுகளின் முக்கியத்துவத்தை அப்பா, மகள் செண்டிமெண்ட்டோடு சொல்லியிருப்பது தான் ‘மின்மினி’ படத்தின் கதை.” என்றார்.

 

‘மின்மினி’ திரைப்படத்தின் பாடல்களை எழுதியிருக்கும் இயக்குநர் பேரரசு, முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7945

மோஷன் போஸ்டர் மூலம் வெளியான ‘தி இந்தியா ஹவுஸ்’ பட அறிவிப்பு
Monday May-29 2023

குளோபல் ஸ்டார்  நடிகர் ராம் சரண், 'வி மெகா பிக்சர்ஸ்' என்ற தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் திரையுலகில் தனது அடுத்த பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார்...

சரத்குமார் - அசோக் செல்வன் நடிப்பில் உருவான ‘போர் தொழில்’ டீசர் வெளியானது
Monday May-29 2023

சரத்குமார், அசோக் செல்வன் முதன்மை பாத்திரங்களில் இணைந்து நடிக்க நிகிலா விமல்  முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள ’போர் தொழில்’ திரைப்படத்தை E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் & எப்ரியஸ் ஸ்டுடியோவுடன் இணைந்து அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது...

”எனக்கு ஆண்களை பிடிக்காது என்று நினைக்காதீங்க” - நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்
Monday May-29 2023

பிவிஆர் திரையரங்குகளில் தென்னிந்திய தலைமை அதிகாரியான மீனா சாப்ரியா, தனது வாழ்க்கை சுயசரிதத்தை ‘அன்ஸ்டாப்பபல்’ (UNSTOPPABLE) என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...