அறிமுக இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப் இயக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ’ரைட்டர்’. சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் ‘மெட்ராஸ்’ ஹரி, இனியா, இயக்குநர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வரும் டிசம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘ரைட்டர்’ படத்தின் சிறப்பு திரையிடல் நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்று படம் பார்த்தனர்.
இயக்குநர் வெற்றிமாறன் படத்தை பார்த்துவிட்டு படத்தை தயாரித்த இயக்குநர் பா.இரஞ்சித்தையும், படத்தை இயக்கிய இயக்குநர் பிராங்ளின் ஜேக்கப்பையும் கட்டிப்பிடித்து பாராட்டினார்.

படம் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் கூறுகையில், “ரொம்ப முக்கியமான படத்தை தமிழ் சினிமாவிற்கு தந்திருக்கிறீர்கள். சமுத்திரக்கனியின் நடிப்பு தனித்துவமாக இருக்கிறது. இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்பட வரிசையில் ’ரைட்டர்’ இருக்கும். தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் சிறப்பாக தங்களது திறமைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட படங்களை தயாரித்துவரும் இரஞ்சித்துக்கு எனது வாழ்த்துக்களும் அன்புகளும்.” என்றார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...