பரத் முதல் முறையாக போலீஸ் வேடத்தில் நடிக்கும் படத்தின் தொடக்க விழா இன்று சென்னையில் எளிமையாக நடைபெற்றது. இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில் இயக்குகிறார். இவர் நாளை இயக்குநர் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர். இவரது சக போட்டியாளர்கள் தான் ‘ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் மற்றும் ‘குரங்கு பொம்மை’ படத்தை இயக்கிய நித்திலன் என்பது குறிப்பிடத்தக்கது.
லீப்பிங் ஹார்ஸ், இன்கிரடிபுள் புரொடக்ஷன்ஸ், தீனா ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்க, சுரேஷ் பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் குறித்து இயக்குநர் ஸ்ரீசெந்தில் கூறுகையில், “சஸ்பென்ஸ் திரில்லராக இப்படம் உருவாகியிருக்கிறது. இதில் பரத் முதன் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். அவருடன் கண்ணதாசனின் பேரனான ஆதவ் கண்ணதாசன் மற்றும் சுரேஷ் மேனன் ஆகியோரும் கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். நாயகி கேரக்டரில் நடிப்பதற்காக முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இறுதியானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறோம். இப்படத்தின் படபிடிப்பு விஜயதசமியான இன்று முதல் தொடங்குகிறது.” என்றார்.
இப்பட்த்தின் தலைப்பு மற்றும் பஸ் லுக் போஸ்டரை தீபாவளியன்று வெளியிட திட்டமிட்டிருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்.எஸ்.சிவநேசன் கூறினார்.
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் பட்டியலில் இருந்து, தவிர்க்க முடியாத ஹீரோவாக உருவெடுத்திருக்கும் அர்ஜூன் தாஸ், தனது கதை தேர்வு மூலம் ரசிகர்களை வியக்க வைத்திருக்கிறார்...
இயக்குநர் ஷெரீஃப் தனது முதல் படமான ‘ரணம் அறம் தவறேல்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இதயபூர்வமாக கற்பனை செய்த கதையை, தயாரிப்பாளர் ஜெய் கிரண் (ஆதிமூலம் கிரியேஷன்ஸ்) உறுதியுடன் கையில் எடுத்ததின் விளைவாக உருவானது ‘காந்தி கண்ணாடி’...
விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன்ஸ் தயாரிப்பில் விஜய் ஆண்டனி நாயகனாக நடிக்கும் சக்தி திருமகன் படத்தின் முன் வெளியீட்டு விழா 10...