Latest News :

கதாநாயகியின் அம்மாவை கவர்ந்த முகேன்!
Wednesday December-22 2021

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த முகேன் ராவுக்கு என்று மிகப்பெரிய ரசிகர் வட்டம் உள்ள நிலையில், அவர் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். முகேனின் முதல் திரைப்படமான ‘வேலன்’ வரும் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை, தியாகராயா நகரில் உள்ள பெண்கள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது. இதில் முகேன் ராவ், நாயகி மீனாக்‌ஷி, பிரபு, சூரி உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் முகேனை பார்த்ததும் கல்லூரி மாணவிகள் ஆரவாரம் செய்ததோடு, நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்து ஆட்டம் போட்டு கொண்டாடினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய படத்தின் நாயகி மீனாக்‌ஷி கோவிந்தன், “மூன்று வருடங்களுக்கு முன்பு இந்த கல்லூரியில் படிக்க விண்ணப்பித்தேன். ஆனால், எனக்கு இடம் கிடைக்கவில்லை. இப்போது ஒரு பிரபலமாக இங்கே வந்திருப்பது மகிழ்ச்சி. இந்த படம் அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்கும். படத்தில் காமெடி காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவரும். படப்பிடிப்பில் நாங்கள் சிரித்துக்கொண்டே தான் நடித்தோம். அதனால், உங்களுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும். முகேனுக்கு அதிகமான பெண் ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்படி ஒரு படம் நான் நடிக்கப் போறேன், என்று என் வீட்டில் சொன்னதும், என் அம்மா ரொம்பவே ஆர்வமாகிவிட்டார். முகேனா...நான் பார்க்கணும் கதை கேளு, என்று சொன்னாங்க. அந்த அளவுக்கு அவங்களுக்கு முகேனை பிடிக்கும். அவருடைய ரசிகர்கள் அவரை அதிகமாக நேசிக்கிறார்கள். அது ஏன், என்பது அவருடன் நடித்த போது தான் தெரிந்தது. மிக நல்ல மனிதர். இந்த படத்திற்குப் பிறகு நானும் அவருடைய ரசிகையாகிவிட்டேன்.” என்றார்.

 

நடிகர் முகேன் ராவ் பேசுகையில், “இவ்வளவு பெரிய மேடையை என் வாழக்கையில் முதல் முறையாக பார்க்கிறேன். கவின் அண்ணா, கலைமகன் முபாரக் இருவருக்கும் மிகப்பெரிய நன்றி, ஒரு கலைஞன் தனக்கு வாய்ப்பு கிடைக்காத என ஏங்கி கொண்டிருப்பான் அப்படி ஏங்கும் போது வாய்ப்பு தந்தவர்கள் இவர்கள், கவின் அண்ணா என்னிடம் கதை சொன்னபோதே மிகவும் ரசித்தேன். அவர் சொன்ன மாதிரியே சூப்பராக எடுத்திருக்கிறார். முபாரக் சார் என்னை மட்டுமல்ல இன்னும் நிறைய திறமையாளர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார், அவருக்கு நன்றி. பிரபு சார் மிகப்பெரிய லெஜண்ட் ஆனால் என்னை ஒரு மகனை போல், ஒவ்வொன்றையும் சொல்லிக்கொடுத்து பார்த்து கொண்டார். சூரி அண்ணாவுக்கு நான் மிகப்பெரிய ரசிகன் அவர் இன்னும் மிகப்பெரிய உயரத்திற்கு செல்ல வேண்டும். ராகுல் முதலில் பார்த்தவுடனே நெருங்கி விட்டோம், நிறைய கஷ்டங்களை தாண்டி வந்துள்ளார் அவர் ஜெயிக்க வேண்டும். தம்பி ராமையா அவரும் ஒரு நல்ல பாத்திரம் செய்துள்ளார். இந்தப்படமே ஒரு குடும்பமாக இணைந்து செய்துள்ளோம். மீனாக்‌ஷி மிகவும் அர்ப்பணிப்புடன் நடிக்க கூடியவர் தனது வேலையை சரியாக செய்பவர், சூப்பராக நடித்திருக்கிறார். பிரிகிடாவும் சூப்பராக நடித்திருக்கிறார். இந்த வரவேற்புக்கு உங்களுக்கு நன்றி. உங்கள் அன்பு தான் இங்கு என்னை அழைத்து வந்துள்ளது. வேலன் படம் எனக்கு மிகவும் முக்கியமான படம் இப்படம் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இருக்கும்.” என்றார்.

 

Velan Audio Launch

 

நடிகர் பிரபு பேசுகையில், “இந்த கல்லூரியில் இந்த நிகழ்வு நடக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி. முகேனுக்கு இது போல் நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கவின் ஒரு அருமையான இயக்குநர், கலைமகன் மிகச்சிறந்த தயாரிப்பாளர். ராகுல் தம்பி இணையத்தில் கலக்குகிறார். மீனாக்‌ஷியுடன் நடித்தது சந்தோஷம். தம்பி சூரி மிக கடினமாக உழைத்து இந்த இடத்திற்கு வந்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்கள். பிக்பாஸ் முகேன் மிக நல்ல பையன், எப்படி அவர் பிக்பாசில் உண்மையாக இருந்து ஜெயித்தாரோ, அதே போல் இப்படத்துக்கும் உழைத்துள்ளார்.  அவருக்கு இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். இந்தப்படத்தில் பாடல்கள் நன்றாக இருக்கிறது ஆக்சன் காட்சிகள் காமெடி எல்லாம் நன்றாக வந்துள்ளது. படம் உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும். எங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பளித்த ஜெயின் காலேஜுக்கு நன்றி.” என்றார்.

 

இயக்குநர் கவின் பேசுகையில், “ஜெயின் காலேஜ் மாணவிகளுக்கு நன்றி இவ்விழாவை ஒரு திருவிழா போல் மாற்றி விட்டீர்கள், நன்றி. பிரபு சார் 2019 விஸ்வாசம் பட போஸ்ட் புரடக்சன் போது எல்லோருக்கும் 200 ரூபாய் கொடுத்து வந்தார் நான் தள்ளி நின்றேன் என்னை அழைத்து எனக்கும் கொடுத்து வாங்கிங்க உங்க வாழ்க்கை நல்லாருக்கும் என்றார். அவரிடம் தான் இது ஆரம்பித்தது. அப்புறம் முகேனை பார்த்தேன் பொள்ளாச்சி பையனாக நடிக்க வேண்டும் அவர் சரியாக இருப்பார் என, அவரிடம் கதை சொன்னேன், சிரித்து என்ஜாய் செய்தார். நான் சரியாக வருவேனா எனக்கேட்டார் நீங்கள் சரியாக இருப்பீர்கள் என்று சொல்லி ஒப்பந்தம் செய்தேன். கலைமகன் முபாரக் சாரை சந்தித்து கதை சொன்னேன். ஒரு அறிமுக இயக்குனருக்கு, அறிமுக நாயகனுக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட் வேண்டாம் என எல்லோரும் சொன்னார்கள், ஆனால் இந்தப்படத்திற்கு இது கண்டிப்பாக தேவை மக்கள் ரசிப்பார்கள் என்று ஒப்புக்கொண்டார் அவருக்கு நன்றி.  சூரி அண்ணாதான் நடிக்க வேண்டும் என்று அவரிடம் சொன்னேன், அவர் அப்போது அண்ணாத்த, வெற்றிமாறன் சார் படம் என பிஸியகா இருந்தார் ஆனால் என்னிடம் கதை கேட்டு உன் படம் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று சொல்லி நடித்து தந்தார். இப்போது வரை ஒரு அண்ணனாக படத்திற்கு உதவி செய்து வருகிறார். தம்பி ராமையா, படத்தில் எல்லோருடனும் அவருக்கு மட்டும் தான் காட்சிகள் இருக்கிறது. மிக அட்டகாசமாக நடித்திருக்கிறார். மீனாக்‌ஷி மிக அருமையாக நடித்து தந்துள்ளார். ப்ராங்ஸ்டர் ராகுல் அவரே சொந்தமாக நிறைய டெவலப் செய்து அசத்தினார். தொழில் நுட்ப கலைஞர்கள் எல்லோரும் எனக்காக உடனிருந்து உழைத்தார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவில் அசத்தியுள்ளார். எல்லோருக்கும் நன்றி. ஒரு மிகச்சிறந்த பொழுது போக்கு படமாக உங்கள் அனைவரையும் இப்படம் கவரும்.” என்றார்.

 

ஸ்கைமேன் பிலிம் இண்டர்நேஷ்னல் சார்பில் கலைமகன் முபாரக் தயாரித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் கவின் எழுதி இயக்கியுள்ளார். இவர் இயக்குநர் சிறுத்தை சிவாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

7950

வியப்பில் ஆழ்த்தும் மாதவனின் புதிய மாற்றம்!
Monday October-27 2025

டிரைகலர் பிலிம்ஸ் உடன் இணைந்து வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புரட்சிகர தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் கொடையாளர் ஜி...

நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? – இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்!
Monday October-27 2025

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்து பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் கிடைத்து ஓடிக்கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்...

தினேஷ் ராஜ் மற்றும் தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் தொடங்கியது!
Monday October-27 2025

Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி...

Recent Gallery