தமிழ் இசை ஆல்பங்களுக்கு தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருவதால், பல இசை ஆல்பங்கள் வெளியாக தொடங்கியிருப்பதோடு, பெரிய பெரிய இசை நிறுவனங்களும் தமிழில் இசை ஆல்பங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்த நிலையில், கனடா நாட்டில் வாழும் தமிழரான செந்தில் குமரன் ஒரு நல்ல பாடகர். தனது இசை ஆல்பங்கள் மூலம் உலக தமிழகர்களிடம் பிரபலமாகியுள்ளார். கனடா நாட்டில் மிகப்பெரிய விளம்பர நிறுவனம் ஒன்றில் ஆலோசககார பணியாற்றி வருகிறார். இசை மீதுள்ள ஆர்வத்தின் காரணமாக அவர் அங்குள்ள தமிழ் மற்றும் கனடா நாட்டு இசைக்கலைஞர்களுடன் சேர்ந்து திரைப்பட பாடல்களுக்கு கவர் பாடல்களை பாடி, சொந்தமாக பல இசை ஆல்பங்களையும் தயாரித்து வீடியோ பதிவு செய்து அப்பாடல்களை தனது ’மின்னல் மியூசிக் யூடியுப்’ (Minnal Music YouTube) சேனலில் வெளியிட்டு வருகிறார்.
செந்தில் குமரனின் குரலுக்கு என்று ஒரு ரசிகர் வட்டம் உருவாகி வருவதோடு, தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபல பாடகர்களும் அவரது பாடல்களை கேட்டு பாராட்டி வருகிறார்கள். பிரபல இசையமைப்பாளர் பிரவின் மணியுடன் சேர்ந்து பல்வேறு பாடல்களை பாடி வெளியிட்டு வரும் செந்தில் குமரன், தற்போது நவீன் வரிகளில் “கோ...கோ...கோவிந்தா...” என்ற பாடலை வைஷாலி என்னும் பாடகியோடு பாடி தயாரித்து வெளியுட்டுள்ளார்.

மின்னல் மியூசில் YouTube சேனலில் வெளியாகியுள்ள “கோ...கோ...கோவிந்தா...” பாடல் மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றிருப்பதோடு, அப்பாடலை படமாக்கிய விதமும் பலரால் பாராட்டு பெற்று வருகிறது.
மக்களை உற்சாகப்படுத்தும் மற்றும் மகிழ்விக்கும் விதமாக உருவாகியுள்ள இப்பாடல், மிகப்பெரிய பழமையான பாய்மர கப்பலில் பிரமாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 50-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் நடன கலைஞர்கள் என்று பெரிய Team ஐயே வைத்து செந்தில் குமரன், அப்பாடலை ஒரு பிரமாண்ட திரைப்படத்தின் பாடல் காட்சியைப்போல் படமாக்கிய விதம் அனைவரையும் கவர்ந்து வருகிறது.
ழகரம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில், நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் ஜித்து மாதவன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படமான ‘சூர்யா 47’ படப்பிடிப்பு நேற்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது...
இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சின்ன சின்ன ஆசை' எனும் திரைப்படத்தில் நடிகை மதுபாலா மற்றும் நடிகர் இந்திரன்ஸ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள்...
மும்பை, டிசம்பர் 2025: இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்தியா திரைப்பட கையகப்படுத்தல் ஒப்பந்தங்களில் ஒன்றான பனோரமா ஸ்டுடியோஸ், பென் ஸ்டுடியோஸுடன் இணைந்து ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்திருக்கும் மலையாளத் திரைப்படமான ’த்ரிஷ்யம் 3’ இன் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளைப் பெற்றுள்ளது...