ஹாலிவுட் சினிமாவின் ஜாம்பவான்கள் ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் இணைந்து நடித்த ‘அயர்ன் மாஸ்க்’ திரைப்படம் சீனா, ரஷ்யா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் மிகப்பெரிய வசூலை ஈட்டிய அதிரடி ஆக்ஷன் திரைப்படமான இப்படம் தமிழில் வெளியாகிறது.
ஜாக்கி சான் மற்றும் அர்னால்ட் ஆகியோர் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கும் இப்படம் 49.1 பில்லியன் பட்ஜெட்டில் மிக பிரமாண்டனமான திரைப்படமாக உருவாகியுள்ளது. வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், சிரித்து மகிழக்கூடிய காமெடி காட்சிகளும் நிறைந்த இப்படம் தமிழ் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடிக்கப் போவது உறுதி.
டிரகானை அழித்து மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சீனா செல்கிறார். முதலில் ஜாக்கி சானை துரத்தும் அர்னால்ட், பிறகு அவருடன் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்றினார்களா இல்லையா, என்பதே கதை.
‘ஜூராசிக் பார்க், ‘கிங்காங்’ போன்ற படங்களை தமிழில் வெளியிட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் ‘அயர்ன் மாஸ்க்’ திரைப்படத்தை தமிழில் வெளியிடுகிறது.
எம்.ஜி.ஆர் - சிவானி, ரஜினி - கமல், விஜய் - அஜித் ஆகியோர் இணைந்து நடித்தால் தமிழ் சினிமாவில் எப்படி ஒரு பரபரப்பு ஏற்படுமோ, அத்தகைய ஒரு பரபரப்பை உலக அளவில் ஏற்படுத்திய ‘அயர்ன் மாஸ்க்’ தமிழகத்திலும் அப்படி ஒரு பரபரப்பை ஏற்படுத்த இம்மாதம் வெளியாகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...