விஜய் மிலடன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சரத்குமார் முக்கியமான கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கும் இப்படத்தின் மூலம் பிரபல கன்னட நடிகர்கள் தனஞ்செயா மற்றும் ப்ருத்வி அம்பர் ஆகியோர் தமிழ் சினிமாவில் அறிமுமமாகிறார்கள். இவர்களுடன் நடிக்க, சரண்யா பொன்வண்ணன், முரளி சர்மா, தலைவாசல் விஜய், சுரேந்தர் தாகூர் பிரணிதி ஆகியோர் நடிக்க, இயக்குநர் ரமணா வித்தியாசமான வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இளம் நடிகை மேகா ஆகாஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இன்பிடினிட்டி பிலிம் வெண்ட்சர்ஸ் சார்பில் கமல் போஹ்ரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போஹ்ரா, எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் ‘மழை பிடிக்காத மனிதன்’ ஆக்ஷன் கமர்ஷியல் திரைப்படமாக உருவாகி வருகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...