Latest News :

அறிமுக நடிகரை முத்தத்தால் நனைத்த நாயகி! - வைரலாகும் டீசர்
Sunday December-26 2021

அறிமுக நடிகர் ருத்ரா கதாநாயகனாக நடிக்கும் படம் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’. இதில் கதாநாயகியாக ‘கடுகு’ படத்தில் நடித்த சுபிக்‌ஷா நடிக்கிறார். மகேஷ் பத்மநாபன் இயக்கும் இப்படத்தை நபீஹா மூவி புரொடக்‌ஷன்ஸ் சார்பில் நுபய்ஸ் ரஹ்மான தயாரிக்கிறார்.

 

ராஜேஷ் அப்புக்குட்டன் மற்றும் ருத்ரா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

குறிப்பாக டீசர் ஒன்றில் இடம் பெற்ற சில காட்சிகளில் கதாநாயகி சுபிக்‌ஷா, முத்த மழையில் நாயகன் ருத்ராவை நனைத்திருக்கிறார். இந்த டீசர் சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

 

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜான், தமிழகத்தில் ஒரு இடத்தில் அனுமதி பெற்றுவிட்டால் அனைத்து இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த அனுமதியளிக்க வேண்டும், என்ற கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையால் ‘சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை’ படம் பற்றிய செய்திகள் பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் சோசியல் மீடியாவில் வெளியாகி படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டது.

 

இந்த நிலையில், படத்தின் முத்தக்காட்சிகளோடு வெளியாகியிருக்கும் டீசரால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ள இப்படம் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

 

 

Related News

7959

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery