சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் காரணமாக தனி இசை பாடல்கள் மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வீடியோ வடிவில் வெளியாகும் தனி இசை பாடல்களுக்கு மக்களிடம் கிடைக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், திரை நட்சத்திரங்கள் இதுபோன்ற பாடல்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் சாந்தனுவும், நடிகை மஹிமா நம்பியாரும் தனி இசை ஆல்பம் ஒன்றுக்காக இணைந்துள்ளனர். “குண்டுமல்லி...” என்று தொடங்கும் இந்த பாடல் தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியாகி மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
நடிகர் ஆதவ் கண்ணதாசன் இயக்கத்தில், எம்.கே.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராம் பிரசாத் மற்றும் ஷரண் தயாரித்துள்ள, உற்சாகமான காதல் பாடலான “குண்டுமல்லி...” பாடலை சரிகமா ஒரிஜினல்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சாந்தனு தனது துறுதுறு நடிப்பால் கவர்கிறார். மஹிமா நம்பியார் தனது முகபாவங்களால் மனங்களை கொள்ளை கொள்கிறார்.

இந்தப் பாடலுக்கு ஜெரார்ட் ஃபெலிக்ஸ் இசையமைத்து, நித்யஸ்ரீயுடன் இணைந்து தமிழ் பதிப்பை பாடியுள்ளார். திமுகவின் சட்டமன்றத் தேர்தல் பிரச்சார கீதமான 'ஸ்டாலின் தான் வாராரு' பாடலுக்கு இசையமைத்தது ஜெரார்ட் ஃபெலிக்ஸ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
கே.எஸ்.ஹரிஷங்கர் மற்றும் நித்யஸ்ரீ குண்டுமல்லி பாடலின் மலையாள பதிப்பை பாடியுள்ளனர். குண்டுமல்லி பாடலுக்கான தமிழ் வரிகளை விவேக் ரவியும்,
மலையாள வரிகளை ரஃபீக்கும் எழுதியுள்ளனர். திருமணம் செய்து கொள்ள போகும் ஜோடியின் உணர்வுகளை பாடல் வரிகள் அழகாக வெளிப்படுத்தியுள்ளன.
ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொள்ள, படத்தொகுப்பை கார்த்திக் மனோரமா கவனிக்க, கலை இயக்கத்தை தினேஷ் செய்துள்ளார். காயத்ரி ரகுராம் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...