ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் படம் ‘கலியுகம்’. பிரைம் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.ராமகிருஷ்ணா, ஆர்.கே.இண்டர்நேஷ்னல் இன்கார்பரேட் என்ற நிறுவனத்தின் பெயரில் தயாரித்து வரும் இப்படத்தை ப்ரமோத் சுந்த இயக்குகிறார்.
‘விக்ரம் வேதா’, ‘நேர்கொண்ட பார்வை’ போன்ற படங்கள் மூலம் கவனம் ஈர்த்த ஷரத்தா ஸ்ரீநாத் கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் கிஷோர் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
கே.ராம்சரண் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தின் முதல் கட்டப்படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கும் நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு தற்போது தொடங்கியிருக்கிறது.
இதற்காக மிகப்பெரிய பட்ஜெட்டில் கலைநயம் மிக்க அதிநவீன அரங்கம் ஒன்று வடிவமைக்கப்பட்டு, அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. மேலும், படத்தில் ஏராளமான கிராபிக்ஸ் காட்சிகள் மிக நேர்த்தியாக கையாளப்பட்டுள்ளது.
கே ராம்சரண் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றிருக்கிறது. தற்போது இரண்டாவது மற்றும் இறுதி கட்ட படப்பிடிப்பு, பிரம்மாண்டமான பட்ஜெட்டில் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட அதிநவீன அரங்கத்தில் தொடங்கியிருக்கிறது.

போஸ்ட் அபோகாலிப்டிக் எனப்படும் இறுதி பேரழிவிற்கு பின்னரான திரில்லர் ஜானரில் உருவாகி வரும் ‘கலியுகம்’ திரைப்படம் திறமைக்க கலைஞர்களின் கூட்டு முயற்சியில் உருவாகி வருவதோடு, படப்பிடிப்பில் இருக்கும் போதே எதிர்ப்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...