Latest News :

சமந்தாவின் ‘யசோதா’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது
Tuesday December-28 2021

கதாநாயகிகளை மையப்படுத்திய கதைகளில் நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் சமந்தா, ‘யசோதா’ என்ற திரைப்படத்தின் கதையின் நாயகியாக எழுத்தாளர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். அறிமுக இயக்குநர்கள் ஹரி - ஹரிஷ் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் தயாரிக்கிறார்.

 

வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கடந்த டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது. இதையடுத்து இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ஜனவரி 3 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரையிலும், இறுதிகட்ட படப்பிடிப்பு ஜனவரி 20 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி வரையிலும் நடைபெறவுள்ளது. 

 

மிகப்பெரிய பட்ஜெட்டில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

 

மணி சர்மா இசையமைக்கும் இப்படத்திற்கு எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். மார்த்தாண்ட் கே.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்ய, அசோக் கலையை நிர்மாணிக்கிறார். புலகம் சின்னராயனா, டாக்டர்.சல்லா பாக்ய லட்சுமி ஆகியோர் வசனம் எழுத, ராமஜோகையா சாஸ்திரி பாடல் எழுதுகிறார்.

Related News

7965

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery