Latest News :

‘ஆர்.ஆர்.ஆர்’ தென்னிந்தியாவின் மைல் கல்லாக இருக்கும் - பிரபலங்கள் பாராட்டு
Tuesday December-28 2021

‘பாகுபலி’ வெற்றியை தொடர்ந்து இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’. (இரத்தம் ரணம் ரெளத்திரம்) தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜனவரி 7 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

 

இந்த நிலையில், இப்படத்தின் முன் வெளியீடு நிகழ்ச்சி நேற்று இரவு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இதில், படத்தின் நாயகர்கள் ராம்சரண் தேஜா, ஜூனியர் என்.டி.ஆர், இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி, பாடலாசிரியர் மற்றும் வசனம் எழுதிய மதன் கார்கி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்க, சிறப்பு விருந்தினர்களாக சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர்கள் ஆர்.பி.செளத்ரி, கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்ட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துக்கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் நடிகைகளும், பிக் பாஸ் பிரபலங்களுமான அனிதா சம்பத் மற்றும் லொஸ்லியா ஆகியோர் இணைந்து நடனம் ஆடினார்கள். மேலும், நடன இயக்குநர் சாண்டி மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்ச்சியும், இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 

நிகழ்ச்சியில் பேசிய சிறப்பு விருந்தினர்கள், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்திற்காக ரசிகர்கள் மட்டும் இன்றி தென்னிந்திய திரையுலகமே காத்துக்கொண்டிருப்பதாக கூறினார்கள்.

 

நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், “மிகப்பெரிய பிரமாண்டமான படமாக உருவாகியுள்ள ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் இயக்குநர் ராஜமவுலி மற்றும் நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் இரத்தம் சிந்தி உழைத்திருக்கிறார்கள். அவர்களின் உழைப்புக்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த படத்தை அனைவரும் திரையரங்கில் தான் பார்க்க வேண்டும். நான், முதல் நாள் முதல் காட்சி பார்ப்பேன்.” என்றார்.

 

உதயந்தி ஸ்டாலின் பேசுகையில், ”இரண்டு வருடங்களுக்குப் பிறகு சினிமா சம்மந்தமான நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறேன். அதற்கு காரணம், ராஜமவுலி சார் தான். அவருடைய பெரிய ரசிகன் நான். இந்தப் படம் பாகுபலியின் சாதனையை முறியடிக்கும் என ராஜமவுலியிடம் சொன்னேன். 

 

இந்தப் படத்திற்கும் எனக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. 10 வருடங்கள் முன்னர் மஹதீரா படத்தை டப் செய்து தமிழில் வெளியிட்டோம். அப்போது சத்யம் திரையரங்கில் அப்படத்தை வெளியிட வேண்டும் என ராஜமவுலி கேட்டுக்கொண்டார். இப்போது ஆர்ஆர்ஆர்  படத்தை மூன்று ஏரியாக்களில் ரெட் ஜெயண்ட் வெளியிடுகிறது. எப்படியும் சத்யம் திரையரங்கின் 6 திரைகளில் 5 திரைகளில் இந்தப் படத்தைத்தான் போடுவோம். இந்தப் படம் தென்னிந்தியாவின் ஒரு மைல் கல்லாக இருக்கும்” என்றார்.


Related News

7966

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery