தொலைக்காட்சி தொடரில் நடித்து பிரபலமாகி பிறகு வெள்ளித்திரை நடிகரானவர்களில் பிளாக் பாண்டியும் ஒருவர். பல திரைப்படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வரும் பிளாக் பாண்டி, தனக்கான இடம் இன்னும் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால், அவருடைய நண்பர்கள் பலர் தற்போது சினிமாவில் பெரிய இடத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.
நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை அஞ்சலி போன்றவர்கள் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே பிளாக் பாண்டியுடன் நட்பு பாராட்டியவர்களாம். நடிகை அஞ்சலியை “வாடி...போடி...” என்று பேசும் பிளாக் பாண்டி சிவகார்த்திகேயனையும் “வாடா...போடா...” என்று பேசும் அளவுக்கு நெருங்கிய நண்பராக இருந்தவராம்.
தற்போது சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியிடம் சரியாக பேசுவதில்லையாம். இதற்கான காரணத்தை பிளாக் பாண்டி சமீபத்திய பேட்டி ஒன்றில் சொல்லியிருக்கிறார். அதாவது, பிளாக் பாண்டி கஷ்ட்டப்பட்ட காலத்தில் சிவகார்த்திகேயன் தனது மேலாளர் மூலம், அவருக்கு பணம் கொடுத்துவிட்டாராம். ஆனால், அதை வாங்க மறுத்த பாண்டி, சிவாவின் படத்தில் வாய்ப்பு கொடுக்க சொல்லுங்கள், என்று கூறினாராம். அந்த சம்பவத்திற்கு பிறகு தான் சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியிடம் சரியாக பேசுவதில்லையாம்.
அதேபோல், நடிகை அஞ்சலி ‘அங்காடி தெரு’ படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே பிளாக் பாண்டிக்கு தெரியுமாம். இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்ததோடு, ஒன்றாக நடன பயிற்சியில் ஈடுபட்டார்களாம்.
அஞ்சலி முன்னணி நடிகையாக வளர்ந்த போது, அவருக்கு போன் செய்தால், அதை அவருடைய மேனேஜர் தான் எடுத்து பேசுவாராம். இதனால் கடுப்பான பிளாக் பாண்டி, ஒரு முறை அஞ்சலியை நேரில் பார்த்து திட்டிவிட்டாராம். அதன் பிறகு அவரிடம் சாரி கேட்ட அஞ்சலி, அவருடைய பர்ஷனல் தொலைபேசி எண்ணை கொடுத்தாராம். ஆனால், அந்த எண்ணில் அவரை தொடர்பு கொண்ட போதும் அஞ்சலி போனை எடுக்கவில்லையாம். இதனால் கடுப்பான பிளாக் பாண்டி, மீண்டும் அஞ்சலியின் நேரடி தரிசனத்திற்காக காத்துக்கொண்டிக்கிறாராம்.
இப்படி அடையாளம் தெரியாத காலத்தில் தனக்கு நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள் தற்போது உச்சத்திற்கு சென்ற போது, முன்பு இருந்தது போல் இருக்கவில்லை. உயரத்திற்கு சென்றுவிட்டால் இப்படி தான் நடந்துக்கொள்ள வேண்டுமோ என்னவோ, என்று எனக்கு தெரியவில்லை. ஆனால், எப்போதும் ஒரே மாதியாக நான் நானாகவே இருக்கிறேன், என்று வருத்தத்தோடு பிளாக் பாண்டி கூறியிருக்கிறார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...