தொலைக்காட்சி மூலம் பலகோடி ரசிகர்களை கவர்ந்த ப்ரஜின், சில திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால், அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அவரது திரைப்பயணத்தில் சிறு தடை வர தற்போது மீண்டும் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இளையராஜா இசையமைப்பில் உருவாகும் ‘நினைவெல்லாம் நீயடா’ என்ற படத்தில் நாயகனாக நடித்து வரும் பிரஜின், தற்போது மேலும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தை ‘பொதுநலன் கருதி’ படத்தை இஅக்கிய சியோன் இயக்குகிறார். ‘பொதுநலன் கருதி’ என்ற வித்தியாசமான பெயரில் தனது முதல் படத்திலேயே பரவலாகப் பேசப்பட்ட இயக்குநர் சீயோன், தனது இரண்டாவது படத்தின் மூலம் நாட்டின் நடப்பு அரசியலைத் தோலுறித்து காட்ட இருக்கிறார்.
இப்படித்தான் வாழ வேண்டும் என்றிருக்கும் ஒருவனுக்கும், எப்படியும் வாழலாம் என்று இருக்கும் இன்னொருவனுக்கும், என இரு துருவ குணச்சத்திரங்களுக்கும் இடையில் சுழலும் சம்பவங்கள்தான் கதை.
இப்படம் அரசியல் நகைச்சுவை காதல் சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த கலவையாகவும், பரபரப்பான அரசியல் காட்சிகள் நிறைந்த படமாகவும் இருக்கும், என்கிறார் இயக்குநர் சீயோன்.
இந்த படத்தில் ப்ரஜின் நாயகனாகவும், குஹாசினி நாயகியாகவும் நடிக்கவுள்ளார்கள். இவர்களுடன் வனிதா விஜயகுமார், தயாரிப்பாளர் கே. ராஜன், கஞ்சா கருப்பு, நாஞ்சில் சம்பத், முத்துராமன், பாவனா, சிவான்யா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தை மாபின்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சாலமன் சைமன் தயாரிக்கிறார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு விசுவாசம் படத்தில் பணியாற்றிய ஜிஜு, உடன்பிறப்பே படத்தில் பணியாற்றிய முஜிபுர் கலை இயக்கத்தைக் கவனிக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இதில், படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டார்கள்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...