தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்திய சினிமாவிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த மீனா, திருமணத்திற்குப் பிறகு குணச்சித்திர வேடங்களில் நடித்து வருவதோடு, வில்லி உள்ளிட்ட எதிர்மறையான வேடங்களில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், நடிகை மீனா மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், 2022 ஆம் வருடத்தில் எனது வீட்டுக்குள் வந்த முதல் பார்வையாளர் கொரோனா தான். அது எனது குடும்பத்தார் அனைவரையும் பாதித்துள்ளது. இருப்பினும் நாங்கள் அதை எங்க வீட்டில் இருக்க விட மாட்டோம். எனவே நீங்களும் பாதுகாப்பாகவும், எச்சரிக்கையாகவும் இருங்கள், என்று நடிகை மீனா தெரிவித்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலையில் சினிமா பிரபலங்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மூன்றாவது அலை உருவாகியிருப்பதோடு, சினிமா பிரபலங்கள் பலர் இந்த மூன்றாவது அலையில் பாதிக்கப்பட்டு வருவது சினிமாத்துறையினரிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...