Latest News :

பா.இரஞ்சித்தின் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படப்பிடிப்பு முடிவடைந்தது
Thursday January-06 2022

இயக்குநர் பா.இரஞ்சித்தின் இயக்கத்தில், ஆர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடி தளத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றதோடு, ஒடிடி-யில் அதிகம் பேர் பார்த்த திரைப்படம் என்ற பெருமையையும் பெற்றது. அப்படத்தை தொடர்ந்து பா.இரஞ்சித் ‘நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வந்தார்.

 

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் யாழினி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தென்மா இசையமைக்கிறார். கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துள்ளது. 

இறுதி நாள் படப்பிடிப்பை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினார்கள். 

Related News

7976

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery