சமுத்திரக்கனி நாயகனாக நடிக்கும் படத்திற்கு ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தொண்டர்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லும் இன்று வெளியாகியுள்ளது.
சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் காளி வெங்கட், ரித்விகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குநர் ரா.பரமன் இயக்கும் இப்படத்தை கே.கே.ஆர் சினிமாஸ் நிறுவனம் சார்பில் கே.கே.ரமேஷ் தயாரிக்கிறார்.
ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுத, கே.எல்.பிரவீன் படத்தொகுப்பு செய்கிறார்.
இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக்கை இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் விஜய் சேதுபதி இன்று வெளியிட்டனர்.
படம் குறித்து கூறிய இயக்குநர் ரா.பரமன், “தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன் முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக 'சமுத்திரக்கனியின் பப்ளிக்' உருவாகி இருக்கிறது.'' என்றார்.

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...