Latest News :

திரையரங்கில் வெளியாகும் திரைப்படங்களுக்கு இலவச டிக்கெட்! - ஓடிடி நிறுவனத்தின் அசத்தல் திட்டம்
Sunday January-09 2022

தொழில்நுட்ப வளர்ச்சியால் திரைத்துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக ஒடிடி தளங்களின் வருகையாலும், அவற்றுக்கு மக்கள் வழங்கி வரும் ஆதரவுகளினாலும் திரைத்துறையில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், பல பெரிய திரைப்படங்களை ஒடிடி-யில் பார்க்க முடிவதில்லை, என குறையும் மக்களிடம் இருக்கிறது. அத்தகைய குறையை போக்குவதோடு, பல்வேறு சலுகைகளையும் வழங்க வருகிறது புதிய ஒடிடி நிறுவனம் ஒன்று.

 

ஆம், அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட பொழுதுபோக்கு நிறுவனமான எமோஷனல் எண்டர்டெயின்மெண்ட் நெட்வொர்க் ‘தியேட்டர் ஹூட்ஸ்.காம்’ (theatre hoods.com) என்ற பெயரில் புதிய ஒடிடி தளத்தை இந்தியா மற்றும் உலக அளவில் அறிமுகம் செய்கிறது.

 

வரும் ஜனவரி 15 ஆம் தேதி முதல் செயல்பட உள்ள இந்த தளத்தின் மூலம் சினிமா தியேட்டர் மற்றும் ஒடிடி தளம் இரண்டும் இணைந்து செயல்பட இருக்கிறது. இதில், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட அனைத்து இந்திய பிராந்திய மொழிகளில் திரைப்படங்கள், தொடர்கள், டி.வி.நிகழ்ச்சிகள், இசை ஆல்பங்கள் போன்ற உள்ளடக்கங்களை ஒரே தளத்தில் கண்டு மகிழலாம்.

 

மேலும், திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான இலவச டிக்கெட்டுகளை வழங்குவதோடு, அவர்களின் ஓ.டி.டி இயங்குதளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தையும் வழங்குகிறார்கள்.

 

இந்த புதிய நிறுவனம் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து நிறுவனத்தின் தலைவர் பிரசாத் வசிகரன் கூறுகையில், “இந்திய சினிமா ஆர்வலர்களை நாங்கள் ஆழமாக புரிந்துகொண்டுள்ளோம். நமது சினிமாக்களை பற்றி நான் பெருமைப்படுகிறேன். அது நம் வாழ்க்கையில் ஒரு பகுதியாக உள்ளது. அது நம் உணர்வுடன் கலந்திருக்கிறது.

 

எங்களது ஓடிடி இணையதளத்தில் பயனாளர்களுக்கு ஒவ்வொரு கணமும் சுவாரஸ்யமாக்குவதை எங்கள் முதன்மையான குறிக்கோளாக கொண்டுள்ளோம். நாங்கள் உலகத்தரம் வாய்ந்த உள்ளடக்கத்தை வழங்குகிறோம். ஐந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய பிராந்திய மொழிகள் உள்ளடக்க நூலகத்தையும், ஆயிரம் அசல் திரைப்படங்கள் மற்றும் தொடர்களையும் உருவாக்கி வருகிறோம். இப்பொழுது மிகக்குறைவான திரைப்படங்களே ஓடிடி தளங்களில் நேரடியாக திரையிடப்படுகின்றன. மேலும் பெரிய படங்கள் பெரும்பாலும் திரையரங்குகளில் வெளியாகிறது. சினிமா ரசிகர்கள் ஓடிடி-யில் படங்களை பார்க்க 30 முதல் 45 நாட்கள் வரை காத்திருக்கிறார்கள். மேலும் சினிமா தியேட்டர் அனுபவங்கள் வித்தியாசமானவை. இந்த இடைவெளியை நிரப்ப நாங்கள் விரும்புகிறோம். 

 

இந்தியாவில் திரையாங்குகளில் வெளியிடப்படும் புதிய திரைப்படங்களுக்கான, இலவச டிக்கட்டுகளையும், எங்கள் தியேட்டர் ஹுட்ஸ் ஓடிடி தளத்தில் வரம்பற்ற உள்ளடக்கத்தை பார்க்கும் அனுபவத்தையும் இணைத்து வழங்குகிறோம். இது இணையம் மற்றும் ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் மொபைல் ஆப்களில் உலகம் முழுவதும் கிடைக்கிறது.

 

திரைப்படத் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், உள்ளடக்க படைப்பாளர்களை ஆதரிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். மில்லியன் கணக்கான சினிமா ரசிகர்களை கவரும் வண்ணம் அவர்கள் எதிர்பார்க்கும் திரைப்படங்களின் விளம்பரங்களை அவர்களுக்கு இலவசமாக வழங்குகிறோம்.” என்று தெரிவித்தார்.

Related News

7985

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ படத்தின் மூன்றாவது பாடல் வெளியானது!
Wednesday March-27 2024

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபேமிலி ஸ்டார்’ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் ஹோலி பண்டிகை தினத்தன்று வெளியிடப்பட்டது...

இயக்குநர் லோகேஷ் கனகராஜை தேர்வு செய்தது ஏன்? - நடிகை ஸ்ருதி ஹாசன் விளக்கம்
Tuesday March-26 2024

நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஸ்ருதி ஹாசன் இசையமைப்பில் ‘இனிமேல்’ என்ற சுயாதீன வீடியோ பாடல் வெளியாகியுள்ளது...