Latest News :

‘யூத் சூப்பர் ஸ்டார்’ ஆன நடிகர் ஆர்யன் ஷ்யாம்!
Sunday January-09 2022

கலைமாமணி  திருமதி.பாம்பே ஞானம் சுப்பிரமணியம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிரம்மாண்ட நாயகன்’. திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதி பற்றிய ஆன்மீக திரைப்படமான இப்படத்தில் சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக ஆர்யன் ஷ்யாம் நடிக்க, அதிதி மகாலட்சுமியாகவும், சந்தியா பத்மாவதி தேவியாகவும் நடித்திருக்கிறார்கள். 

 

திருப்பதி என்றாலே சுவாமி பாலாஜியும், அக்கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டும் தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இதுவரை யாரும் அறிந்திராத திருப்பதி கோவிலின் வரலாறு மற்றும் அங்கு சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதி எப்படி வந்தார், உள்ளிட்ட பல சுவாரஸ்யமான தகவல்களோடும், உண்மை சம்பவங்களோடும் உருவாகியுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில், இப்படத்தில் ஸ்ரீவெங்கடாஜலபதி வேடத்தில் நடித்த ஆயன் ஷ்யாம், அப்படியே கதாப்பாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருப்பதோடு, என்.டி.ஆர்-க்கு பிறகு கடவுள் கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாகவும் இருக்கிறார், என்று பலரிடம் பாராட்டு பெற்று வருகிறார்.

 

இந்த நிலையில், ’பிரம்மாண்ட நாயகன்’ படத்தைப் பார்த்த திருப்பதி தேவஸ்தான் தலைவர் மற்றும் அவரது குழுவினர் படக்குழுவினரையும், இயக்குநர் பாம்பே ஞானத்தையும் பாராட்டியதோடு, படத்தில் திருப்பதி சுவாமி ஸ்ரீவெங்கடாஜலபதியாக நடித்த ஆர்யன் ஷ்யாமை, கட்டி பிடித்து பாராட்டியதோடு, பகவான் பாலாஜியாகவே இந்தப் படத்தில் வாழ்ந்துக்காட்டியிருக்கிறீர்கள். அவரை திரைப்படம் மூலமாக தரிசனம் பண்ற பாக்கியத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டீர்கள். என்று புகழ்ந்துள்ளனர்.

 

மேலும், இந்த படத்திற்காக விரதம் இருந்து நடித்ததை குறிப்பிட்டு பாராட்டிய தேவஸ்தான தலைவர், நடிகர் ஆர்யன் ஷ்யாமிற்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ’யூத் சூப்பர் ஸ்டார்’ (youth Superstar) என்ற பட்டத்தை வழங்கி கெளரவித்திருப்பதோடு, இது தொடர்பாக தேவஸ்தான தலைவர் துஷ்மந்த் குமார் தாஸ், ஆர்யன் ஷ்யாமை பாராட்டி கடிதமும் கொடுத்திருக்கிறார்.

 

எஸ்.ஆனந்த்பாபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு திவாகர் சுப்பிரமணியம் இசையமைத்திருக்கிறார். அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ள ‘பிரம்மாண்ட நாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

 

Aryan Shyam

 

இப்படத்தை தொடர்ந்து ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அமானுஷ்யம் மற்றும் பிளாக் மேஜிக்கை மையப்படுத்திய சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள ‘அந்த நாள்’ படத்தில் ஆர்யன் ஷ்யாம் நடித்துள்ளார். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்திற்கு பிறகு மேலும் பல படங்களில் நடிப்பது குறித்த பேச்சு வார்த்தையில் ஆர்யன் ஷ்யாம் ஈடுபட்டுள்ளார்.

Related News

7986

”’பீனிக்ஸ்’ நாயகன் சூர்யாவுக்கு மிகப்பெரிய எதிர்காலம் உள்ளது” - இயக்குநர் அனல் அரசு புகழாரம்
Saturday July-12 2025

இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...

திரைப்பட தயாரிப்பில் இறங்கிய 'நாய்ஸ் அண்டு கிரைன்ஸ்'!
Saturday July-12 2025

திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...

தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘மார்ஷல்’!
Saturday July-12 2025

‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

Recent Gallery