Latest News :

‘கார்பன்’ சொல்ல வரும் சொல்லப்படாத கதை!
Wednesday January-12 2022

விதார்த்தில் 25 வது திரைப்படமான ‘கார்பன்’ படத்தில் நாயகியாக தான்யா பாலகிருஷ்ணன் நடித்திருக்கிறார். இவர்களுடன் இயக்குநர் மாரிமுத்து, மூணாறு ரமேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி,  வினோத் சாகர், ரவுட்  செந்தில், பேபி ஜானு பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் ‘அண்ணாதுரை’ படத்தை இயக்கிய சீனிவாசன் இயக்கியிருக்கும் இப்படம்,இதுவரை எந்த ஜானரிலும் வராத கதையாம். 

 

காவல்துறை பணியில் சேருவதை லட்சியமாக கொண்ட விதார்த், அதற்கான தீவிர முயற்சியில் இருக்க, ஒரு இரவில் கனவு காண்கிறார். அந்தக் கனவில் விதார்த்தின் அப்பாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்கிறது.இது வெறும் கனவுதானே என்று நினைக்கும் விதார்த் வாழ்வில் அடுத்தநாளே அப்படியொரு சம்பவம் நடக்கிறது. கனவில் பார்த்தமாதிரியே ஆக்சிடெண்ட் நடக்கும் இடம்,கார் எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது. அப்பாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமும் இல்லாமல்,விபத்து ஏற்படுத்திய நபரின் முகம் தெரியாமல் அவர் படும் பாடுதான் 'கார்பன்'.

 

படம் குறித்து இயக்குநர் சீனிவாசன் கூறுகையில், “இப்போல்லாம் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் எல்லோருமே காம்பினேஷன் இருந்தால் தான் படம் பண்ணவே வர்றாங்க. கதையை மட்டும் நம்பி வர்றது சிலபேர்தான்! அப்படி எனக்கு கிடைத்தவர்தான் 'பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் ' ஜோதி முருகன் - பாக்கியலட்சுமி இரண்டு பேரும். ரெண்டு பேருமே நண்பர்கள் தான். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். லாக்டவுனுக்கு ஊருக்கு வந்திருந்த போது, இந்தக் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று ஆரம்பிச்சு இதோ ரிலீஸ்க்கு ரெடி படம் பார்த்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் என் படத்துக்கு கிடைத்த வெற்றி.” என்றார்.

 

விவேக் ஆனந்தம் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். பிரவின் கே.எல் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

Related News

7989

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery