இயக்குநர் ஹரி இயக்கத்தில், அருண் விஜய் முதல் முறையாக நடிக்கும் படம் ‘யானை’. இதில், நாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடிக்க, சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், கருடா ராம், புகழ், தலைவாசல்விஜய், இமான் அண்ணாச்சி, அம்மு அபிராமி, ஐஸ்வர்யா, போஸ் வெங்கட், ஜெயபாலன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கிராமம் மற்றும் நகர பின்னணியில் இயக்குநர் ஹரியின் வழக்கமான பரபரப்பான திரைக்கதையுடன் உருவாகி வரும் இப்படத்தில் அருண் விஜய், இதுவரை ஏற்றிராத வேடத்தில் நடித்துள்ளார்.
இராமேஸ்வரம், தூத்துக்குடி, காரைக்குடி, பழனி மற்றும் சென்னை ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ள ‘யானை’ திரைப்படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜனவரி 13 ஆம் தேதி படத்தின் முதல் பாடலை படக்குழுவினர் வெளியிடுகின்றனர்.
ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். அந்தோணி படத்தொகுப்பு செய்ய மைக்கேல் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். அனல் அரசு சண்டைக்காட்சிகளை வடிவமைக்க, பாபா பாஸ்கர், தினா ஆகியோர் நடனம் அமைக்கின்றனர்.
டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் வெடிக்காரன்பட்டி எஸ்.சக்திவேல் தயாரிக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் திரையாங்கு வெளியீடு மற்றும் இசை, டிரைலர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிக்க உள்ளனர்.
சங்கமித்ரன் புரொடக்ஷன்ஸ் மற்றும் அம்மன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில், என்...
பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஆகாஷ் அமையா ஜெயின் தயாரிப்பில் ஜெயராம்,விஜய் சேதுபதி, நகுல், ஆத்மிகா, ரித்திகா சென் நடிப்பில் சனில் இயக்கியுள்ள திரைப்படம் காதல் கதை சொல்லவா...
மனோ கிரியேஷன்ஸ் சார்பில் ஏ...