Latest News :

மனைவி இயக்கத்தில் மகளுடன் சேர்ந்து நடித்த ராஜசேகர்!
Thursday January-13 2022

ஆங்ரி ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் ராஜசேகர் நடிப்பில் உருவாகும் படம் ‘சேகர்’. அவருடைய 91 வது திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அவரது மனைவியும் பிரபல நடிகையுமான ஜீவிதா ராஜசேகர் இயக்க, இந்த நட்சத்திர தம்பதியின் மூத்த மகளான ஷிவானி ராஜசேகர், படத்திலும் ராஜசேகரின் மகள் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

 

புதுமையான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை பீரம் சுதாகர ரெட்டி, ஷிவானி ராஜசேகர், ஷிவாத்மிகா ராஜசேகர் மற்றும் பொக்ரம் வெங்கட ஸ்ரீனிவாஸ் ஆகியோர் இணைந்து பீகாசஸ் சினிகார்ப், ( Pegasus Cinecorp), தரஸ் சினிகார்ப் (Taurus Cinecorp), சுதாகர் இம்பக்ஸ் ஐபிஎல் (Sudhakar Impex IPL), மற்றும் திரிபுரா கிரியேஷன்ஸ் (Tripura Creations) ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கின்றனர்.

 

இப்படம் குறித்து இயக்குநர் ஜீவிதா ராஜசேகர் கூறுகையில், “இத்திரைப்படத்தில் ராஜசேகருக்கும் ஷிவானிக்கும் இடையேயான காட்சிகள் ரசிகர்களுக்கு பெரிய ஈர்ப்பை தரும் வகையில் இருக்கும். அவர்கள் நிஜ வாழ்க்கையில் எப்படி இருக்கிறார்களோ, அப்படியே தான் படத்திலும் வருகிறார்கள். படத்தின் காட்சிகள் அனைத்தும் வெகு இயல்பானதாகவும் அவர்களின் நடிப்பும் தத்ரூபமாக இருப்பதில்  நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். படத்தின் முதல் காட்சித்துணுக்கும்,  'லவ் காண்டே' பாடலும்  பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தின் அனைத்து அம்சங்களும் ரசிகர்களை கவரும் வகையில் சிறப்பாக இருக்கும். படத்தின் போஸ்ட் புரொடக்‌சன் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.” என்றார்.

 

இப்படத்தில் டாக்டர் ராஜசேகர், ஆத்மிய ராஜன், 'ஜார்ஜ் ரெட்டி' புகழ் முஸ்கான் குப்சந்தனி, ஷிவானி ராஜசேகர், அபினவ் கோமதம், கன்னட கிஷோர், சமீர், பரணி, ரவிவர்மா, ஷ்ரவன் ராகவேந்திரா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

லட்சுமி பூபாலா கதை எழுதியுள்ள இப்படத்திற்கு மல்லிகார்ஜுன் நரகனி ஓளிப்பதிவு செய்துள்ளார். அனுப் ரூபன்ஸ் இசையமைக்க, சம்பத் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

Related News

7992

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery