இயக்குநர் சுந்தர்.சி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஒன் 2 ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திரிஷா நடிப்பில் வெளியான ‘பரமபத விளையாட்டு’ படத்தை இயக்கிய கே.திருஞானம் இயக்கும் இரண்டாவது படமான இப்படத்தை 24 HRS புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது.
இதில் சுந்தர்.சி-க்கு ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். இவர்களுடன் விஜய் வர்மா, ஜார்ஜ் ஆண்டனி, விச்சு, மானஸ்வி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க, வில்லன் வேடத்தில் நடிக்க முன்னணி நடிகர் ஒருவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். ஆர்.ஜெனார்த்தனன் கலை இயக்குநராக பணியாற்ற ரக்கர் ராம் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.
இப்படத்தின் துவக்க விழா இன்று பூஜையுடன் நடைபெற்றது. படப்பிடிப்பு இம்மாதம் இறுதியில் தொடங்க உள்ளது.

VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்...
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...