’அங்காடித்தெரு’ படம் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் மகேஷுக்கு, அப்படத்திற்குப் பிறகு பெயர் சொல்லும்படியான வாய்ப்பு கிடைக்கவில்லை. ஒரு சில படங்களில் அவர் நடித்து வந்தாலும், நல்ல கதைக்காக காத்திருந்தார். தற்போது வரது காத்திருப்புக்கு பலன் கிடைத்திருக்கிறது. ஆம், மகேஷு நாயகனாக நடிக்கும் ’ஏவாள்’ படம் கோலிவுட் பார்வை மீண்டும் மகேஷின் மீது திரும்பும் வகையிலான ஒரு திரைப்படமாகும்.
மகேஷ் கதையின் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஐந்து நடிகைகள் நடிக்கிறார்கள். பிரதான நாயகியாக மோக்க்ஷா நடித்திருக்கிறார். இவர் அடிப்படையில் ஒரு பரதநாட்டியக் கலைஞர், பெங்காலியில் சில படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்தவர்.தமிழில் இவருக்கு இதுதான் முதல் படம்.
இன்னொரு நாயகியாக கௌரி சர்மா நடித்திருக்கிறார். இவர் பாலிவுட்டில் சில படங்களில் தோன்றியவர். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். இந்திய முன்னணி மாடலான மதுமிதாவும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் பிருத்விராஜ் படம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அக்ஷரா ராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.பிரபல மாடல் பர்சிதா சின்காவும் இருக்கிறார். இவர் இப்போது இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார். இன்னொரு மாடல் ஆரத்தி கிருஷ்ணாவும் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் 3, தமிழில் 2 என்று படங்களில் நடித்துள்ளவர்.இவர் இப்படத்தின் தயாரிப்பிலும் பங்கெடுத்துள்ளார். இப்படி 5 கதாநாயகிகள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள்.
நீளமான தாடி வைத்துள்ளவர்களுக்கான போட்டியில் உலக அளவில் இரண்டாம் இடமும் இந்திய அளவில் முதலிடமும் பெற்ற ப்ரவீன் பரமேஸ்வரர் இந்தப் படத்தில் ஒரு முக்கியமான பாத்திரம் ஏற்றுள்ளார். இவர்களுடன் மிப்பு, பிரவீன்,மிதுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஜித்தேஷ் கருணாகரன் இயக்கியிருக்கும் இப்படத்தை RA1என்டர்டெய்ன்மென்ட் வழங்க, ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் ஆரத்தி கிருஷ்ணா மற்றும் ஆர்.எல் ரவி தயாரித்துள்ளனர். இணைத் தயாரிப்பு மது ஜி , மற்றும் எஸ் . எஸ்.பிரபு. திரைக்கதை ரஞ்சித் ராகவன், வசனம் பாடல்கள் முருகன் மந்திரம், ஒளிப்பதிவு கிருஷ்ணா பி.எஸ், இசை ரெஜிமோன், படத் தொகுப்பு அனந்து எஸ். விஜய்.
தனது காதலியின் திடீர் மரணத்திற்கு காரணம் சைக்கோ கொலைகாரன் என்ற உண்மையை தெரிந்துக்கொள்ளும் நாயகன், அவனை பழிவாங்க புறப்படுகிறான். இதற்கிடையில் பில்லி சூனியம் ஏவல் போன்ற அமானுஷ்ய சக்திகள் விளையாட, அதன் பின்னணியை பரபரப்பாக சொல்வது தான் ‘ஏவள்’ படத்தின் கதை.

ஹாலிவுட் படங்களுக்கு நிகரான நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் இப்படத்தின் திகில் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு பாண்டிச்சேரி, பாலக்காடு,குட்டிக்காணு, பீர்மேடு ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒரு வாழ்வியல் பயணம் சார்ந்த பாடல், டூயட் பாடல் என்று இரு பாடல்கள் உள்ளன .படத்தில் இடம்பெறும் சண்டைக் காட்சிகளில் ஆண்கள் மட்டுமல்ல பெண்களும் மோதும் காட்சிகள் பரபரப்பை ஊட்டும்.
இந்திய சினிமாவின் முதல் சூனியக்காரி படமாக உருவாகியுள்ள ’ஏவாள்’ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் ட்ரெய்லரை பொங்கல் தினத்தன்று படக்குழு வெளியிட்டுள்ளது.படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறும்
India's first kid's animation film, 'Kiki & Koko' directed by P.Narayanan and presented by Inika Productions, had its teaser launch event on Dec 26, 2025...
இனிகா புரொடக்ஷன்ஸ் வழங்கும் குழந்தைகளுக்கான இந்தியாவின் முதல் அனிமேஷன் படம் ‘கிகி & கொகொ’...
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஸ்ருதிஹாசன், நடிப்புடன் மட்டுமல்லாமல் தன் இசைத் திறமையாலும் ரசிகர்களின் மனதை வென்று வருகிறார்...