நடிகர் ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யா, திருமணமாகி ஒரு குழந்தை பெற்றெடுத்த நிலையில், தனது கணவரை விவாகரத்து செய்தார். அதன் பிறகு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டார்.
இந்த நிலையில், ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவின் கணவரும் பிரபல நடிகருமான தனுஷ், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் தனது மனைவி ஐஸ்வர்யாவை பிரிந்து வாழப்போவதாக அறிவித்துள்ளார். மேலும், தனது 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது இளைய மகள் திருமண வாழ்க்கையில் தோல்வியை தழுவிய நிலையில், தற்போது தனது மூத்த மகளின் 18 வருட திருமண வாழ்க்கை தோல்வியடைந்திருப்பது ரஜினிகாந்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா பயணத்தில் பல வெற்றிகளை கண்ட ரஜினிகாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனை நடந்து வருவது அவரது ரசிகர்களை பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...