Latest News :

லைகா பிடியில் ‘ஸ்பைடட்’
Friday July-28 2017

ரசிகர்களின் ரசனையை  துல்லியமாக கணித்து அதற்கேற்ப படங்களை தயாரிப்பதிலும், வாங்கி வெளியிடுவதில் வல்லுனர்களாக  இருக்கும் நிறுவனம் 'லைகா' புரொடக்‌ஷன்ஸ். தமிழ் சினிமா உலகின் மிக முக்கிய சக்திகளில் ஒன்றாக மாறிவரும் இந்த நிறுவனம்' தற்பொழுது 'ஸ்பைடர்' படத்தின் திரையரங்கு உரிமத்தை பெற்றுள்ளது. 

 

எல்லா வயது ரசிகர்களாலும், மொழிக்கு அப்பாற்பட்டு கொண்டாடப்படும் மகேஷ் பாபுவும் , திரைக்கதையிலும் இயக்கத்திலும் இந்தியாவே ஆச்சிரியத்தில் பார்க்கும் A R முருகதாஸும் முதல் முறையாக 'ஸ்பைடர்' படத்தில் இணைந்துள்ளனர். இவர்களின் இந்த சங்கமம் இப்படத்தை இந்தியாவே எதிர்பார்க்கும் படமாக்கியுள்ளது. பெரும் பொருட்ச்செலவில் மிக பிரம்மாண்டமாய் தயாரிக்கப்படும் இப்படத்தில், மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங்க் நடித்துள்ளார். இவர்களுடன் S J சூர்யா, R J பாலாஜி, நதியா, பரத், பிரியதர்ஷினி புலி கொண்டா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். உலகத்தர ஒளிப்பதிவிற்காக சந்தோஷ் சிவன் பணியாற்றியுள்ளார். இந்த மிக மிக வலுவான அணிக்கு ஈடு கொடுக்கும் வகையில் ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்களும் பின்னணி இசையும் இருக்கும் என கூறப்படுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் தேர்ந்த படத்தொகுப்பும், பீட்டர் ஹெய்னின் ஹோலிவுட்டுக்கு நிகரான சண்டை காட்சிகளும் 'ஸ்பைடர்' படத்தை மேலும் சிறப்பாக்கவுள்ளது. ' L L P' நிறுவனத்திற்காக திரு.தாகூர் மது மற்றும் திரு.N V பிரசாத் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர்.வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி நவராத்திரியை முன்னிட்டு  உலகம் முழுவதும் பிரம்மாண்டமாய் ரிலீசாக 'ஸ்பைடர்' தயாராகி வருகிறது. ரசிகர்களுக்கு கோலாகல பண்டிகை நாளாக இது இருக்கும் என எதிர்பாக்கப்படுகிறது.

Related News

80

’பாம்’ படம் மூலம் காமெடியில் கலக்க வரும் அர்ஜுன் தாஸ்!
Monday September-08 2025

’கைதி’, ‘மாஸ்டர்’ போன்ற படங்களில் வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ், தற்போது நாயகனாக பலதரப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டு பெற்று வருகிறார்...

ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் வசனம் இல்லாமல் வெளியான ‘உஃப் யே சியாபா’!
Friday September-05 2025

லவ் பிலிம்ஸ் வழங்கும் லவ் ரஞ்சன் மற்றும் அங்கூர் கார்க் தயாரிப்பில்  பிரபல இயக்குநர்  ஜி...

Recent Gallery