2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் சூர்யா, ஜோதிகா தயாரித்த ‘ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகள் கிடைத்து வரும் நிலையில், உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.
சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், 11-வது பாராளுமன்ற உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருதுக்குரிய 4 பிரிவுகள் பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி கே டெவிஸ் வெளியிட்டுள்ளார்.
’ஜெய் பீம்’ படத்தின் தயாரிப்பாளர்களான நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உண்மை கதையை மையமாக கொண்டு சமூக நீதியை முன்னிறுத்தி வெளியிடப்பட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.
மேலும், ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021' என்ற பிரிவில் சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.
வரும் பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதி அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் நடைபெற உள்ள இந்த விருது வழங்கும் விழாவில் நடிகர்கள் சூர்யா, உதயநிதி ஸ்டாலின், நடிகை ஜோதிகா ஆகியோர் நேரில் கலந்துக்கொண்டு விருது பெற்றுக்கொள்ளுமாறு விருது குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
VCare நிறுவனத்தின் அதிநவீன Centre of Excellence (COE) மையத்தை நடிகை பிரியா ஆனந்த், VCare குழுமத்தின் நிறுவனரும் மேலாண்மை இயக்குநருமான திருமதி E...
மித்ரா பிக்சர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் எம்...
விக்ரம் பிரபு நடிப்பில் சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள படம் ‘சிறை’...