Latest News :

சிலம்பரசனிடம் நடந்த ரூ.100 கோடி பேரம்! - எதற்கு தெரியுமா?
Friday January-28 2022

‘மாநாடு’ வெற்றியின் மூலம் தனது பலத்தை வெளிக்காட்டிய சிம்பு, தற்போது ‘வெந்து தணிந்தது காடு’ மற்றும் ‘பத்துதல’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்ததாக ‘கொரோனா குமார்’ படத்தில் நடிக்க இருக்கிறார். மேலும், பல முன்னணி தயாரிப்பாளர்கள் சிம்புவை வைத்து படம் தயாரிக்க ஆர்வம் காட்டுவதோடு, பல முன்னணி இயக்குநர்களும் சிம்புவை வைத்து பட இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்த நிலையில், மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம் ஒன்று சிம்புவை அனுகி, தங்கள் நிறுவனம் தயாரிப்பில் தொடர்ந்து மூன்று படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, ரூ.100 கோடி சம்பளம் தருவதாகவும், முன் பணமாக ரூ.50 கோடியை உடனடியாக கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறியதாம்.

 

ஆனால், அந்த 100 கோடி ரூபாயை நிராகரித்த சிம்பு, நல்ல கதைகளில் நடிக்க வேண்டும், என்பது தான் என் நோக்கம், பணத்திற்காக படங்களை ஒப்புக்கொள்ள மாட்டேன், என்று கூறிவிட்டாராம். ஆனால், அந்த நிறுவனத்தின் சார்பில் சிம்புவிடம் பேரம் பேசுவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள, சிம்பு  திட்டவட்டமாக முடியாது, என்று கூறிவிட்டாராம்.

 

சிம்புவின் இந்த செயலால் ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமே வியப்படைந்துள்ளது.

Related News

8009

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery