தொடர் வெற்றி நாயகனான சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டாக்டர்’ மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலிலும் பல சாதனைகளை நிகழ்த்திய நிலையில், ’டான்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம், இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் ‘டான்’ படத்தை தயாரித்திருப்பது தான்.
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க, ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன், ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், ராதாரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்துள்ளது.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதோடு, படத்தின் டீசர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. கடந்த ஆண்டு படம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் அதிகரித்ததால் வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.
இந்த நிலையில், இன்று ‘டான்’ படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆம், வரும் மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘டான்’ வெளியாகிறது.
‘டான்’ படத்தின் வெளியீட்டு தேதி வெளியானதை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...