Latest News :

’காவல்துறை உங்கள் நண்பன்’ படக்குழுவினரின் புதிய படம் அறிவிப்பு
Monday January-31 2022

மனதை உலுக்கும் பரபரப்பான கதைக்களத்தோடு கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படத்தின் இயக்குநர் ஆர்.டி.எம் மற்றும் அப்படத்தின் நாயகன் சுரேஷ் ரவி, அப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் என ஒட்டு மொத்த கூட்டணியும் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளார்கள். சர்ச்சையான கதையை தங்களது முதல் படமாக கொடுத்த இந்த கூட்டணி, தங்களது இரண்டாவது படைப்பை முழுக்க முழுக்க நகைச்சுவை படைப்பாக கொடுக்க உள்ளது.

 

ஃபிரண்ட்ஷிப் காமெடி என்ற புதுவகை ஜானரில் உருவாக உள்ள இப்படத்திற்கு ‘பி.ஈ.பார்’ (B.E. BAR) என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரி மாணவர்கள் தங்கள் அரியரை கிளியர் செய்ய படும்பாடுகளை  சுற்றி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுரேஷ் ரவி நாயகனாக நடிக்க, நாயகியாக ’சதுரங்க வேட்டை’ புகழ் இஷாரா நாயர் நடிக்கிறார். இவர்களுடன்  தம்பி ராமையா, லிவிங்ஸ்டன், கல்லூரி வினோத், மது, ரேணுகா மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

விஷ்ணு ஸ்ரீ கே.எஸ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஆதித்யா மற்றும் சூர்யா இசையமைக்கிறார்கள். வடிவேலு மற்றும் விமல்ராஜ் படத்தொகுப்பு செய்ய, சிவராஜ் கலையை நிர்மாணிக்கிறார். கல்லூரி வினோத் வசனம் எழுத, ஞானகரவேல், கானா பிரபா ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

 

ஆர்.டி.எம். கதை, திரைக்கதை எழுதி இயக்கும் இப்படத்தை அப்சலியூட் பிக்சர்ஸ் (Absolute Pictures) சார்பில் மால்கம் மற்றும் பி.ஆர் டாக்கீஸ் கார்ப்பரேஷன், ஒயிட் மூன் டாக்கீஸ் நிறுவனங்கள் சார்பில் பி.பாஸ்கரன், பி.ராஜபாண்டியன், சுரேஷ் ரவி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் முதல் பார்வை விரைவில் வெளியாக உள்ளது.

Related News

8017

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery