ரசிகர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் மிக பிரம்மாண்டமான திரைப்படமான ‘ஆர்.ஆர்.ஆர்’-ன் வெளியீடு கொரோனா பரவலால் தள்ளிப்போனது. தற்போது கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், புதிய திரைப்படங்களின் வெளியீட்டு தேதிகளை தயாரிப்பு நிறுவனங்கள் அறிவித்து வருகிறது. அதன்படி, ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியும் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் வரும் மார்ச் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதனை படக்குழுவினர் இன்று அறிவித்துள்ளனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
’பாகுபலி’ படத்திற்குப் பிறகு எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கியிருக்கும் இப்படத்தில் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடிக்க, பிரபல பாலிவுட் நட்சத்திரங்களான ஆலியா பட், அஜய் தேவுகன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருக்கிறார்கள்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...