அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘தேஜாவு’ திரைப்படத்தின் டீசரை நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் கடந்த 27 ஆம் தேதி தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டார். வெளியான சில நிமிடங்களில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, திரையுலக பிரபலங்கள் பலர் படக்குழுவினரை வாழ்த்து தெரிவித்து டீசரை தங்களது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், ‘தேஜாவு’ டீசர் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனைப் படைத்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பும் அதிகரித்து வருவதால், படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.
அறிமுக இயக்குநர் அரவிந்த் ஸ்ரீனிவாசன் இயக்கியிருக்கும் இப்படத்தில் மதுபாலா, அச்சுத குமார், ராகவ் விஜய், ஸ்ம்ருதி வெங்கட், மைம் கோபி, சேத்தன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கும் இத்திரைப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க, அருள்.இ சித்தார்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார்.
வைட் கார்பெட் ஃபிலிம்ஸ் சார்பில் விஜய் பாண்டி தயாரித்துள்ள இப்படத்தினை பி.ஜி.மீடியா ஒர்க்ஸ் சார்பில் பி.ஜி.முத்தையா இணைந்து தயாரித்துள்ளார்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...