தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 1 போட்டியின் இறுதி நாளான நேற்று ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஹாரி கல்யாண், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம், சினேகன் என நான்கு போட்டியாளர்களில் ஆரவுக்கு தான் அதிகமான ரசிகர்களின் வாக்குகள் கிடைத்ததாக போட்டி குழுவினர் அறிவித்து பிக் பாஸ் கோப்பையை அவருக்கு வழங்கினார்கள்.
ஆரவ் வெற்றி பெறுவார் என்று யாரும் எதிர்ப்பார்க்காத நிலையில், விஜய் டிவி-யின் இத்தகைய முடிவு, பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வெற்றி பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட மிஸ்டர் க்ளீன் கணேஷ் வெங்கட்ராம் நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.
இந்த நிலையில், பிக் பாஸில் ஆரவின் வெற்றி அநியாயமானது, என்று நடிகை கஸ்தூரி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வடிவேலு அழுவதுபோன்ற புகைப்படம் ஒன்றை போட்டு, ஆரவ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அநியாயம், என்று பதிவிட்டுள்ளார்.
#BiggBossGrandFinale
— kasturi shankar (@KasthuriShankar) September 30, 2017
ஆராம் ?
ஆரவாம்.
ஆரு ?
ஆரவ்.
ஆரவ்வ்வ்வ்வ்வ்வ் !#அநியாயம். pic.twitter.com/vSALY3eauA
இயக்குனர் அனல் அரசு இயக்கத்தில் சூர்யா விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூலை நான்காம் தேதி திரையரங்குகளில் வெளியான பீனிக்ஸ் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது...
திரைத்துறை ஜாம்பவான்கள் கலந்து கொள்ளும் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக தயாரித்து, உருவாக்கி, நடத்துவதன் மூலம் இந்திய ஊடக வெளியில் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் முன்னணி ஊடகத் தயாரிப்பு மற்றும் திறமை மேலாண்மை நிறுவனமான நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் (Noise and Grains), திரைப்பட தயாரிப்பில் களம் இறங்குகிறது...
‘டாணாக்காரன்’ பட புகழ் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்திற்கு ‘மார்ஷல்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...