Latest News :

மீண்டும் இயக்குநர் முத்தையாவுடன் கைகோர்த்த விக்ரம் பிரபு
Tuesday February-01 2022

முத்தையா இயக்கத்தில் ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் வித்தியாசமான கிராமிய கதாப்பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் விக்ரம் பிரபு, மீண்டும் இயக்குநர் முத்தையாவுடன் கைகோர்த்துள்ளார். இந்த முறை இயக்குநர் முத்தையா கதை, வசனத்தில், கார்த்தியின் திரைக்கதை, இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். ‘டைகர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை எம் ஸ்டுடியோஸ் மற்றும் ஓபன் ஸ்கிரீன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.

 

இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடிக்க, மற்றொரு நாயகியாக அனந்திகா நடிக்கிறார். வில்லனாக சக்தி வாசு நடிக்கிறார். இவர்க்ளுடன் ரிஷி, டேனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

 

சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்திற்கு கதிரவன் ஒளிப்பதிவு செய்கிறார். வீரமணி கலையை நிர்மாணிக்க, மணிமாறன் படத்தொகுப்பு செய்கிறார். பாபா பாஸ்கர் நடனம் அமைக்க, கணேஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார்.

 

பூஜையுடன் தொடங்கியுள்ள இப்படம் குறித்து இயக்குநர் கார்த்தி கூறுகையில், “’டைகர்’ படம் ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமரவைக்கும், பரபர த்ரில்லராக இருக்கும். ஒரு திரைக்கதை எழுத்தாளராக இந்த திரைப்படத்தில்  இயக்குனர் முத்தையா பங்களிப்பது உண்மையில்  உணர்வுப்பூர்வமாக எனக்கு  மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. படத்திற்கு இது ஒரு முக்கிய ஈர்ப்பை தரும் அம்சமாக இருக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த திரைக்கதையை கூற  வாய்ப்பளித்ததற்கும், இப்படத்தை ஒப்புக்கொண்டதற்கும்  விக்ரம் பிரபு சாருக்கு, மிகுந்த  நன்றி. ஒட்டுமொத்த தொழில்நுட்பக் கலைஞர்களும் இந்தப் படத்திற்கு மிகப் பெரிய தூணாக அமைந்துள்ளனர். இது நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும், பரபர திரில்லராக, ஒரு நல்ல திரையரங்கு அனுபவத்தை தரும் படமாக இருக்கும்.” என்றார்.

Related News

8022

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery