Latest News :

கவனம் ஈர்க்கும் இளம் நாயகன் அகிலன் எஸ்.பி.ஆர்
Thursday February-10 2022

நடிகர் விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள  “வீரமே வாகை சூடும்” படத்தில், பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் என அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார் இளம் நாயகன் அகிலன். படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இவரின் சிறப்பான நடிப்பு,  பெரும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

 

விஷால் ஃபிலிம் பேக்டரி சார்பில்,  நடிகர் விஷால் நடிப்பில்  இயக்குநர் து.பா. சரவணன் இயக்கியுள்ள ’வீரமே வாகை சூடும்’ படம் தமிழ் தெலுங்கு கன்னடம் மொழிகளில்,  பிரமாண்ட வெளியீடாக  பிப்ரவரி 4 ஆம் தேதி வெளியாகி  மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. இப்படத்தில் விஷாலின் தங்கையின் காதலனாக, விஷாலுடன் இரண்டாவது நாயகனாக நடித்துள்ளார் நடிகர் அகிலன் எஸ்.பி.ஆர். படம் முழுக்க  வரும் இப்பாத்திரம் படத்திற்கு மிகப்பெரும் பலமாக அமைந்துள்ளது. 

 

இளம் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் அகிலன் தன் தனிச்சிறப்பு மிக்க நடிப்பு திறமையால், அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள் மூலம் அறிமுகமான இவர் சிறிது சிறிதாக வளர்ந்து நாயகன் அந்தஸ்த்திற்கு உயர்ந்திருக்கிறார். வீரமே வாகை சூடும் படம் இவருக்கு மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது. பல தரப்புகளிலிருந்தும் பாராட்டுக்களை குவித்து வருகிறது. 

 

Akilan with Vishal

 

தற்போது  பீட்சா 3 படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு வெப்சீரிஸில் நாயகனாகவும் நடித்துள்ளார். திரையில் நாயகனாக ஒரு மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் தெலுங்கு படத்தில் அறிமுகமாகிறார். இயக்குநர் பானுசங்கர் இயக்கும் இப்படத்திற்கு மணிசர்மா இசையமைக்கிறார். மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. ஒரு இளம் நடிகர் நாயகனாக பிரமாண்டமான தெலுங்கு படத்தில் அறிமுகமாவது இதுவே முதல் முறை. தமிழிலும் இவருக்கு நிறைய வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது சில தமிழ் படங்களில் நாயகானாக ஒப்பந்தமாகியுள்ளார் அகிலன் எஸ்.பி.ஆர். அது பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக 

வெளியிடப்படவுள்ளது.

Related News

8029

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery