Latest News :

சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது
Friday February-11 2022

‘டான்’ மற்றும் ‘அயலன்’ படங்களில் நடித்து முடித்திருக்கும் சிவகார்த்திகேயன் அடுத்ததாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயனின் 20 வது திரைப்படமான இப்படத்தை ‘ஜதி ரத்னதாலு’ என்ற மிகப்பெரிய வெற்றி பெற்ற தெலுங்குப் படத்தின் இயக்குநர் அனுதீப் கே.வி இயக்குகிறார்.

 

சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு, நாராயந்தாஸ் நரங் மற்றும் புச்கூர் ராம் மோகன் ராவ் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினிமாஸ் நிறுவனம் சார்பிலும், சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண் விஷ்வா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறார்கள். எஸ்.எஸ்.தமன் இசையமைக்கிறார்.

 

தற்காலிகமாக ‘எஸ்.கே20’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று காரைக்குடியில் தொடங்கியது. இதில் சத்யராஜ், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.

 

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.

Related News

8032

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery