டி.டி.எஸ்.பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில், டி.துரைசாமி தயாரிப்பில் உருவாகும் படம் ‘காதல் வேகம்’. டி.துரை பாரதி கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இளையராஜா உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியதோடு, மேடை இசை நிகழ்ச்சிகளில் முதன்மையானவராக வலம் வந்த பிரபல இசைக்கலைஞர் எம்.வி.ரகு இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி சுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்ய, கோயா கலை இயக்குநராக பணியாற்றுகிறார். எம்.எல்.ஆனந்த் நடனக் காட்சிகளை வடிவமைக்க, ஜான்சன் சண்டைக்காட்சிகளை வடிவமைக்கிறார். மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.
காதலால் ஒரு இளைஞரின் வாழ்க்கை எப்படி வேகம் எடுக்கிறது, என்பதை மையப்படுத்திய இப்படம் ஆக்ஷன், காமெடி, காதல்,செண்டிமெண்ட் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான கமர்ஷியல் படமாக உருவாக உள்ளது.
இப்படத்தின் துவக்க விழா ஏ.வி.எம் ஸ்டுடியோவில் பூஜையுடன் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ், இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், நடிகர்கள் ஓய்.ஜி.மகேந்திரன், பாபு கணேஷ், பவர் ஸ்டார், முல்லை, கோதண்டம் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்துக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே.செல்வமணி, “நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒரு பிரமாண்ட பூஜையை பார்த்தது சந்தோஷமாக இருக்கிறது. இந்த படத்தின் பூஜையை போல் படமும் பிரமாண்ட வெற்றியடையும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.
இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் பேசுகையில், “இந்த படத்தின் இசையமைப்பாளர் எம்.வி.ரகு மாபெரும் இசைக்கலைஞர் ஆவார். இவர் இசையமைப்பில் இந்த படம் உருவாகிறது என்றால், படத்தின் பாடல்கள் மிகப்பெரிய பெரிய வெற்றி பெறும். படமும் வெற்றி பெறும்.” என்றார்.
இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் பேசுகையில், “ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு படத்தின் பூஜை நடைபெறுகிறது என்றால், அந்த படம் மிகப்பெரிய வெற்றி படமாகத்தான் இருக்கும். அந்த வகையில் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும்.” என்றார்.
பாடல் பதிவு நடைப்பெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது!
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...