நடிகர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் வலம் வரும் உதயநிதி ஸ்டாலின், தற்போது சட்டமன்ற உறுப்பினராக அரசியலில் பரபரப்பாக வலம் வருகிறார். இனி முழுநேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ள உதயநிதி, அதற்காக சினிமாவுக்கு விரைவில் முழுக்கு போட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தற்போது அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற படத்தில் நடித்து வரும் உதயநிதி, அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் தான் உதயநிதி நடிக்கும் கடைசி திரைப்படம் என்றும் கூறப்படுகிறது. மேலும், மிக வலிமையான அரசியலை பேசுகிற இப்படம், உதயநிதியின் எதிர்கால அரசியலுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் சொல்கிறார்கள்.
எனவே, இப்படமும் அதில் பேசப்படும் விசயங்களும் அடித்தட்டு மக்கள் வரை சென்று சேரவேண்டும் என்பதற்காக இந்த படத்தில் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் முன்னிலையில் இருப்பவர்களாக இருக்க வேண்டும் என்று உதயநிதி முடிவு செய்திருக்கிறார்.
அதனை தொடர்ந்து இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ராஹ்மானை ஒப்பந்தம் செய்ததோடு, வடிவேலுவையும் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள். இந்த தகவல்கள் எல்லாம் ஏற்கனவே வெளியான தகவல்கள் தான் என்றாலும், தற்போது இப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, இப்படத்தில் நாயகியாக நடிக்க கீர்த்தி சுரேஷை படக்குழு அனுகியிருக்கிறது. ஆனால், அவர் தேதி இல்லை என்று நடிக்க மறுத்து விட்டாராம். இந்த தகவலை உதயநிதிக்கு தெரியப்படுத்த, அவரோ, கீர்த்தி சுரேஷ் தான் நாயகியாக நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததோடு, மறுப்பு தெரிவித்த கீர்த்தி சுரேஷை கட்டாயப்படுத்தி நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டாராம்.

வரும் மார்ச் 4 ஆம் தேதி சென்னையில் தொடங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, பிறகு சேலம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...