Latest News :

பிரபுதேவாவின் ‘முசாசி’ முதல் பார்வை வெளியீடு
Thursday February-17 2022

இயக்குநராக பல வெற்றி படங்களை கொடுத்த பிரபுதேவா, தற்போது நடிகராக தொடர்ந்து நடித்து வருவதோடு, வித்தியாசமான வேடங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி, அவருடைய வித்தியாசமான நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘தேள்’ பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், பிரபுதேவாவின் புதிய படத்தின் முதல் பார்வை வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

 

‘முசாசி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்குகிறார். ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் முதல் பார்வையை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் இன்று வெளியிட்டார்.

 

சவாலான போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கும் பிரபுதேவாவிற்கு இந்த படத்தில் ஜோடியில்லை. இவருடன் நடிகர்கள் ஜான் விஜய், விடிவி கணேஷ், ஜார்ஜ் மரியான், மலையாள நடிகர் பினு பப்பு, அருள்தாஸ், ‘மாஸ்டர்’ மகேந்திரன், 'பழைய ஜோக்' தங்கதுரை, மகேஷ், மலையாள நடிகை லியோனா லிஷாய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

 

Musasi

 

விக்னேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார்.  ஜாய் ஃபிலிம் பாக்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் ஜான் பிரிட்டோ தயாரித்திருக்கிறார்.

 

பிரபுதேவாவின் கம்பீரமான தோற்றத்தோடும், வித்தியாசமான தலைப்போடும் வெளியாகியிருக்கும் ‘முசாசி’ பட முதல் பார்வை ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றதோடு, இணையத்தில் வைரலாகியும் வருகிறது.

Related News

8042

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery