வெண்ணிலா கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பி.சசிகுமார் தயாரிப்பில், கருணாஸ் நடிப்பில் உருவாகும் படம் ‘ஆதார்’. ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய ராம்நாத் பழனிகுமார் இயக்கும் இப்படம் எளிய மனிதர்களின் வலியைப் பேசும் யதார்த்தப் படைப்பாக உருவாகி வருகிறது.
கதையின் நாயகனாக கருணாஸ் நடிக்கும் இப்படத்தில் அருண்பாண்டியன், 'காலா' புகழ் திலீபன், 'பாகுபலி' புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் முதல் பார்வை பொங்கல் தினத்தன்று வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும், படத்தை வெளியிடுவதற்காக பேச்சுவார்த்தையையும் படக்குழு தொடங்கியிருக்கிறது.
விரைவில் படத்தின் டீசர், முதல் பாடல், டிரைலர் ஆகியவற்றை அடுத்தடுத்து வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு படத்தின் வெளியீட்டு தேதியையும் விரைவில் அறிவிக்க உள்ளது.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...