Latest News :

இதுவரை நடித்திராத கதாப்பாத்திரம்! - மகிழ்ச்சியில் தமன்னா
Saturday February-19 2022

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடிக்க தொடங்கியிருக்கும் தமன்னா, இதுவரை நடித்திராத ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ளது. ‘பப்ளி பவுன்சர்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த இந்தி திரைப்படத்தை பிரபல இயக்குநரும், பல தேசிய விருதுகள் வென்றவருமான மதுர் பண்டர்க்கார் இயக்குகிறார். பெண்களை முதன்மை கதாப்பாத்திரமாக வைத்து பல வெற்றி படங்களை இயக்கிய மதுர் பண்டர்க்காரின் இந்த படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மற்றும் ஜங்லீ பிக்ச்சர்ஸ் இணைந்து தயாரிக்கின்றன.

 

வட இந்தியாவின் உண்மையான பவுன்சர் நகரமான அசோலா ஃபதேபூரை கதைக்களமாகக் கொண்ட இப்படம் ஒரு பெண் பவுன்சரின் வாழ்க்கையை சொல்லும் கற்பனை கதையாகும்.

 

இப்படம் குறித்து கூறிய நடிகை தமன்னா, “பாப்லி பவுன்சர் கதையைப்  படித்தவுடனே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது நான் காதல் வசப்பட்டுவிட்டேன். ஏனென்றால் நான் இதுவரை நடித்த  கதாப்பாத்திரங்களை காட்டிலும் இது ஒரு மிகவும் உற்சாகமான மற்றும் கேளிக்கையான கதாபாத்திரமாகும். பெண்களை முன்னிலைப்படுத்தும் கதாபாத்திரங்களை வடிவமைப்பதிலும்  வரையறுப்பதிலும் மதுர் சார்  மிகச்சிறந்த திறமை படைத்தவர். பப்ளியும் அம்மாதிரியான ஒரு வலிமை வாய்ந்த கதாபாத்திரம். ஒரு திரைப்படம் ஒரு பெண் பவுன்சரின் கதையை முதல் முதலாக ஆராயப் போகிறது, அந்த கதாபாத்திரத்தின் குரலாக நான் ஒலிக்கப்போகிறேன் என்பதை அறிந்து, நான் அளவிட முடியாத உற்சாகத்தில் இருக்கிறேன். இந்த முழுமையான புதிய உலகத்தில் பிரவேசிப்பதற்கு என்னால் காத்திருக்க முடியவில்லை.” என்றார்.

 

படம் குறித்து இயக்குநர் மது பண்டர்க்கார் கூறுகையில், ”ஒரு பெண் பவுன்சரின் இந்தக் கதையை வாழ்க்கையோடு இணைந்த நகைச்சுவை இழையோடு சித்தரிக்க விரும்புகிறேன், அதுவும் மனதை விட்டு அகலாத ஒரு நீடித்த தாக்கத்தை விளைவிக்கிறது. பெண் பவுன்சர்கள் குறித்த உலகத்தின் பார்வையில்  இந்தக் கதையை முன்வைக்க  எப்போதும் போலவே நான்  தயாராக இருக்கிறேன். இது ஒரு மிகச்சிறந்த அற்புதமான கதை, தமன்னா தனது நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.

 

தமன்னா முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சவுரப் சுக்லாம், அபிஷேக் பஜாஜ், சாஹில் வைத் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள். அமித் ஜோஷி, ஆராதனா தேப்நாத், மதுர் பண்டர்கார் ஆகியோர் கதை, திரைக்கதை எழுதியுள்ளனர். தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் வெளியாக உள்ளது.

Related News

8044

‘டிமாண்டி காலனி 3’-யின் ‘தி லைப்ரரியன்’ யார் தெரியுமா?
Wednesday March-18 2026

முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...

‘நாகபந்தம்’ படத்தின் “நமோ ரே” பாடல் வெளியானது!
Tuesday March-17 2026

விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...

‘கேடி : தி டெவில்’ பட பாடலில் நோரா ஃபதேஹி!
Tuesday March-17 2026

பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...

Recent Gallery