தெலுங்கு சினிமாவின் முன்னணி இளம் நாயகனாக ராம் பொத்தினேனி, லிங்குசாமி இயக்கத்தில் உருவாகும் ‘தி வாரியர்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தில் நடித்து வரும் ராம் பொத்தினேனி, பாலகிருஷ்ணா நடிப்பில் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘அகாண்டா’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குநர் போயபதி ஸ்ரீனுவுடன் கைகோர்த்துள்ளார்.
’தி வாரியர்’ படத்தை தயாரித்து வரும் ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் ஸ்ரீனிவாசா சித்தூரி தான் இந்த புதிய படத்தையும் தயாரிக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பிரமாண்ட வெற்றிகளை கொடுத்தவர், தற்போது ராம் பொத்தினேனியின் ‘தி வாரியர்’ படத்தை தயாரித்து வருவதோடு, அடுத்ததாகவும் அவர் நடிக்கும் படத்தை தயாரிப்பது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மூன்று பிரபலங்களும் இணைந்துள்ள இப்படம் இந்திய பன்மொழி திரைப்படமாக உருவாக உள்ள இப்படத்தின் தலைப்பு, நாயகி, பிற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்க உள்ளது.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...