பிரபல திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த், உடல்நிலை குறைவால் இன்று உயிரிழந்தார்.
’அதே நேரம் அதே இடம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகமான லலிதானந்த், கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் இடம்பெற்ற “என் வீட்டுல நான் இருந்தேனே, எதிர் வீட்டுல அவ இருந்தாளே...” என்ற பாடல் மூலம் பிரபலமானார்.
தொடர்ந்து ‘ரெளத்திரம்’, ‘மாநகரம்’, ‘காஸ்மோரா’, ‘ஜூங்கா’, ‘திருமணம்’ உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ள லலிதானந்த், ‘ஒரு எலுமிச்சையின் வரலாறு’ மற்றும் ‘லெமூரியாவில் இருந்த காதலி வீடு’ ஆகிய கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.
இந்த நிலையில், உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாடலாசிரியர் லலிதானந்த், இன்று சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...
அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...
யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...