Latest News :

திரையரங்க அனுபவித்திற்காக உருவாக்கப்பட்ட படம் ‘வலிமை’ - தயாரிப்பாளர் போனி கபூர்
Monday February-21 2022

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள ‘வலிமை’ படம் வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மிகப்பெரிய ஆக்‌ஷன் அட்வெஞ்சர் திரைப்படமாக உருவாகியுள்ள இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனமும், போனி கபூரின் பேய்வீயூ புரொஜக்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது.

 

படம் குறித்து தயாரிப்பாளர் போனி கபூர் கூறுகையில், “நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’ படம்  ரசிகர்கள், வர்த்தக வட்டாரங்கள் மற்றும் பொது பார்வையாளர்கள் மத்தியில் தனது அந்தஸ்தை பெருமளவில் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது தமிழ் நாட்டில் மட்டுமல்ல, மொழி, நாடு எனும் காரணிகளுக்கு அப்பாற்பட்டு உலகம் முழுதுமே ‘வலிமை’ படம் குறித்த எதிர்பார்ப்பு  பார்வையாளர்களிடம் உச்சத்தில் இருக்கிறது. 

 

அஜித் மிகவும் அடக்கமான நடிகர், ஒழுக்கம், தனது தொழிலின் மீது மிகுந்த ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகிய குணங்களில் அவர் தலை சிறந்தவர். தயாரிப்பாளர்களால்  அதிகம் விரும்பப்படும் நடிகர் அவர், என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. படத்தின் ஆரம்ப கட்ட பணிகளின் போது நாங்கள் எதிர்பார்த்தபடி இந்த திரைப்படத்தினை வடிவமைக்க  அவர் பெரும் ஆதரவாக இருந்தார். ‘வலிமை’ படத்தில்  இயக்குநர் வினோத்தின் உழைப்பு அளப்பரியது. அவர் ஒரு பெர்பக்ஸனிஸ்ட், அவர் தனது பார்வையை அடைய எந்தக் எல்லைக்கும் செல்வார், ஆனால் தயாரிப்பாளர் உடன் மிகுந்த நட்புடன் இருப்பார். இந்த கடினமான சவாலான தொற்றுநோய் கால கட்டத்தில் வலிமை படத்தினை முடிக்க,  ஒரு குடும்பத்தைப் போல எங்கள் ஒட்டுமொத்த குழுவினரும் இணைந்து உதவினர் அவர்களுக்கு நன்றி.

 

வலிமை ஒரு தயாரிப்பாளராக, ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட படம் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயமாக, ஓடிடி தளங்கள் திரைப்படங்களுக்கு ஒரு பரந்த சந்தையை  திறந்துள்ளன, ஆனால் ’வலிமை’ போன்ற திரைப்படம் திரையரங்கு அனுபவத்திற்காகவே உருவாக்கப்பட்டது இப்படத்தை ரசிகர்கள் திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டும்.” என்றார்.

 

வலிமை படத்தினை நேரடியாக  ஓடிடி -யில் வெளியிட பல முன்னணி தளங்கள் பெரும் தொகையுடன் போட்டியிட்ட போதிலும், தயாரிப்பாளர் போனி கபூர், அனைத்தையும் தவிர்த்துவிட்டு திரையரங்கில் மட்டுமே படத்தை வெளியிடுவேன் என்பதில் உறுதியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

8050

‘டியர் ரதி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
Sunday December-14 2025

'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த  இன்சாம்னியாக்ஸ் ட்ரீம்  கிரியேஷன்ஸ் எல்...

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுக்கு ரூ.95 லட்சம் நிதி வழங்கிய தமிழக அரசு!
Friday December-12 2025

தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...

தி.மு.க வில் இணைந்தார் ‘புலி’ பட தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார்!
Thursday December-11 2025

திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...

Recent Gallery