Latest News :

”போத பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்” - ஓபனாக பேசிய கிருத்திகா உதயநிதி
Wednesday February-23 2022

முதலியார் பிரதர்ஸ் பிலிம் நிறுவனம் தயாரிப்பில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள வீடியோ இசை ஆல்பம் ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’. பிரபல பாடகி நக்‌ஷா சரண் பாடி நடனம் ஆடியுள்ள இந்த பாடலுக்கு நடனம் அமைத்து நக்‌ஷாவுடன் இணைந்து சாண்டி மாஸ்டர் நடனம் ஆடியுள்ளார்.

 

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இசை ஆல்பத்தின் வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் கிருத்திகா உதயநிதி, நடிகர் அரவிந்த்சுவாமி, டாக்டர்.கமலா செல்வராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டு ‘இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்’இசை ஆல்பத்தை வெளியிட்டனர். 

 

மேலும், நிகழ்ச்சியில் நடிகர்கள் ரியாஸ்கான், பிரேம், நடிகை உமா ரியாஸ், கென் கருணாஸ், புகைப்படக் கலைஞர் கார்த்திக் சீனிவாசன் உள்ளிட்ட பிரபலங்க பலர் கலந்துக் கொண்டார்கள்.

 

Insta Instagram

 

நிகழ்ச்சியில் பேசிய கிருத்திகா உதயநிதி, “நானும் இரண்டு இசை ஆல்பங்களை இயக்கி தயாரித்திருக்கிறேன். அதனால் தான் என்னை இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். பாடலும், நக்‌ஷா மற்றும் சாண்டி மாஸ்டரின் நடனம் சிறப்பாக இருக்கிறது. நக்‌ஷா இந்த பாடலில் தனது நடனத்தை மிக சிறப்பாக தொடங்கியிருக்கிறார். இந்த இடத்தில் சொன்னால் சர்ச்சையாகி விடுமோ என்று நினைக்கிறேன், எனக்கு சாண்டி மாஸ்டரின் “செம போத ஆகாதே...” பாடல் மிகவும் பிடிக்கும். அதுபோல் இந்த பாடலும் பிடித்திருக்கிறது.” என்றார்.

 

நடிகர் அரவிந்த்சுவாமி பேசுகையில், “இங்கு நான் சிறப்பு விருந்தினராக மட்டும் வரவில்லை. நக்‌ஷா சரணின் குடும்ப உறவினராகவும் வந்திருக்கிறேன். பாடல் ரொம்ப நல்லா இருந்தது. இசை ஆல்பத்தில் பங்குபெற்ற கலைஞர்களுக்கு வாழ்த்துகள்.” என்றார்.

 

டாக்டர்.கமலா செல்வராஜ் பேசுகையில், “மது சரண் தனது மகளுக்காக இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார். நக்‌ஷாவின் குரலும், நடனமும் கவரும் வகையில் இருக்கிறது. அவர் மேன்மேலும் பல வெற்றிகளை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.” என்றார்.

 

Insta Instagram Music Album Launch

 

லியோ இசையமைத்து பாடல் எழுதியிருக்கும் இந்த இசை ஆல்பத்தை ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மாதவன் படத்தொகுப்பு செய்ய, தினேஷ் கலையை நிர்மாணித்துள்ளார்.

Related News

8057

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery