ஒளிப்பதிவாளராகவும், இயக்குநராகவும் பல வெற்றிப் படங்களை கொடுத்த விஜய் மில்டன், தற்போது விஜய் ஆண்டனியை அவித்து ‘மழை பிடிக்காத மனிதன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் மேகா ஆகாஷ் நாயகியாக நடிக்க, சரத்குமார் முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் நடிக்கிறார்.
தற்போது பரபரப்பான படப்பிடிப்பில் இருக்கும் இப்படம் குறித்து இயக்குநர் விஜய் மில்டன் கூறுகையில், “நானும் விஜய் ஆண்டனியும் நீண்ட வருடங்களாகவே நெருங்கிய நண்பர்கள், நான் இயக்குநராக முயற்சித்த போது, அவர் நடிகராக முயற்சித்தார். சமீபத்தில் அவரை சந்தித்த போது அவரிடம் இந்த கதையை சொன்னேன், அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஆரம்பித்து விட்டோம். இப்படம் ஒரு உணர்ச்சிகரமான ஆக்சன் படமாக இருக்கும். வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் எந்த சொந்தமும் இல்லாமல் ஒரு புதிய இடத்திற்கு வருபவனுக்கு வாழ்க்கை அம்மா, தங்கை என எல்லாவற்றையும் கொடுக்கிறது. எதுவும் இல்லாத ஒருவனை, எல்லாம் இருக்கும் ஒருவன் என்ன வேண்டுமானலும் செய்யலாம் என நினைக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் தான் இந்தப்படத்தின் மையம், நான் ஆரம்ப காலத்தில் பார்த்த விஜய் ஆண்டனி இப்போது இல்லை, நடிப்பில் அவர் நிறைய தேறிவிட்டார். இந்தப்படம் அவருக்கு ஒரு புது அடையாளம் தரும். அவர் இன்னும் பெரிய உயரத்திற்கு செல்வார். சரத்குமார் என் நண்பர் மிக முக்கிய கதாப்பாத்திரத்தில் மிடுக்காக வருகிறார். விஜயகாந்த் இதில் நடிக்கிறார் என்று நீங்கள் கேள்விப்பட்ட செய்தியும் உண்மைதான், அவருக்கு ஒரு பெரிய மனிதர் பாத்திரம், அவரை திரையில் பார்க்க எனக்கு ரொம்பவும் ஆசை, அவரிடம் கதை சொல்லிவிட்டேன், நடிக்கிறேன் என கூறியிருக்கிறார், காலமும் அவர் உடல் நிலையும் ஒத்துழைத்தால், அடுத்த கட்ட படப்பிடிப்பில் அவர் கலந்துகொள்வார். ஒரு அழகான காதலியாக மேகா ஆகாஷ் நடித்திருக்கிறார். மிக திறமையான பெண் இப்படம் அவர் திறமைக்கு சான்றாக இருக்கும். ரசிகர்கள் எதிர்பார்க்காத மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இப்படத்தில் இருக்கிறது. மனதை அசைத்து பார்க்கும் ஒரு அழகான அனுபவத்தை இந்தப் படம் தரும்.” என்றார்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்து இயக்கும் இப்படத்தை இன்பினிட்டி பிலிம் வெஞ்சர்ஸ் சார்பில் கமல் போரா, லலிதா தனஞ்செயன், பிரதீப்.பி, பங்கஜ் போரா மற்றும் எஸ்.விக்ரம் குமார் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
முட்டாள்தனமான பயமுறுத்தும் காட்சிகள், தேவையில்லாத நகைச்சுவை காட்சிகள், வழக்கமான பேய்படக் காட்சிகள் இல்லாது உண்மையான பயத்தை ரசிகர்களுக்கு உணர வைக்கும் திகில் திரைப்படங்கள் மிகவும் அரிது...
விரைவில் வெளியாக உள்ள பான் இந்திய திரைப்படமான நாகபந்தம் படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாடலான 'நமோ ரே - NAMO Re வெளியிடப்பட்டு, 2026 ஆம் ஆண்டின் ஆன்மீக கீதமாக விரைவில் அங்கீகாரத்தை பெற்று வருகிறது...
பிரேம் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகி வரும் ’கே டி : தி டெவில்’ (KD :The Devil) திரைப்படம் நாடு முழுவதும் ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது...