Latest News :

டோனியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘அதர்வா - தி ஆரிஜின்’ கிராபிக் நாவலை ரஜினிகாந்த் வெளியிட்டார்
Saturday February-26 2022

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சி.எஸ்.கே ஐபில் கிரிக்கெட் அணியின் கேப்டனுமான எம்.எஸ்.டோனியின் நடிப்பில், உருவாகியுள்ள கிராபிக் நாவல் ‘அதர்வா - தி ஆரிஜின்’.ரமேஷ் தமிழ்மணி எழுத்தில் உருவாகியுள்ள இந்த கிராபில் நாவலின் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டார். இதனையடுத்து,  ‘அதர்வா: தி ஆரிஜின்’ கிராபிக் நாவல் இன்று முதல்  Amazon.in தளத்தில் ரசிகர்கள் முன்பதிவு மூலம் பெற்றுக்கொள்ளலாம் இன்று புத்தக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

 

புத்தக வெளியீடு குறித்து எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி கூறுகையில், “சில வாரங்களுக்கு முன்பு அதர்வா: தி ஆரிஜின் நாவலின்  ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம், எம்.எஸ். தோனி ரசிகர்கள் மற்றும் புத்தக ஆர்வலர்களிடம் இருந்து கிடைத்த அமோக வரவேற்பு பிரமிப்பை தரும்படி இருந்தது. ரஜினி சார் எங்களின் உழைப்பை அங்கீகரித்து, முதல் பிரதியை வெளியிட்டது, உற்சாகத்தை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது. அதர்வா எனது முதல் புத்தகம் என்றாலும், எனக்குப் பிடித்த நிஜ வாழ்க்கை சூப்பர் ஹீரோக்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது பெருமையாக உள்ளது. எம்.எஸ்.தோனி  என் மீதும், என் கதையின் மீதும் வைத்திருந்த நம்பிக்கை மற்றும் புத்தகம் குறித்த பயணத்தில்  என்னுடன் நெருக்கமாக பணியாற்றிய விதம் ஆகியவற்றிற்காக நான் அவருக்கு என்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். அதர்வா எனும் இந்த புதிய மாய உலகின்  புதிய கதைசொல்லல் முறையை வாசகர்கள் கொண்டாடுவதை காண ஆவலாக காத்திருக்கிறோம்.

 

Atharva Graphic Noval

 

என்னை நம்பி, இந்த புத்தகம் முடிவடையும் வரை மிகப்பொறுமையாக குழிவினர்  திரு.வேல்மோகன், திரு.வின்சென்ட் அடைக்கலராஜ் மற்றும் திரு.அசோக் மேனர் ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக பணியாற்றினர். எனது பார்வையை உயிர்ப்பிக்க எங்கள் குழு பல ஆண்டுகளாக அயராது உழைத்தது, இந்த நேரத்தில் அவர்களுக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். சூப்பர் ஹீரோ மற்றும் ஆக்‌ஷன் கதைகளை விரும்புபவர்களும், தோனியின் அபிமானிகளும் இந்தப் புத்தகத்தை ரசிப்பார்கள் மற்றும் இது ஒரு தனித்துவமான வாசிப்பு அனுபவமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

 

Atharva Graphic Noval

 

புத்தகத்தை வாங்கும், வாசகர்கள் அத்துடன் ஒரு பிரத்யேக ஏ.ஆர் செயலிக்கான அணுகலை இலவசமாக பெறுவார்கள், அதில் ஒருவர் கதாபாத்திரங்களின் 3D மாதிரிகள் மற்றும் அதர்வாவின் கற்பனை உலகில் அமைக்கப்பட்ட சில கேம்களை அனுபவிக்க அதிலுள்ள பக்கங்களை ஸ்கேன் செய்யலாம். இந்தியாவில் ஆக்மென்டட் ரியாலிட்டி அம்சத்தை அறிமுகப்படுத்திய முதல் நாவல் இந்த புத்தகம் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து எம்.எஸ்.டோனி கூறுகையில்.., “அதர்வா: தி ஆரிஜின் எனும் ஒரு புதிய  திட்டத்தில் நான் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது திறமையான மற்றும் ஆர்வமுள்ள தனிநபர்களின் குழுவால் உருவாக்கப்பட்ட ஒரு சுவாரஸ்யமான படைப்பாகும். ரஜினி சார் குழுவின் பணியை அங்கீகரித்து பாராட்டியுள்ளார், மேலும் அவர் எங்கள் புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட்டதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

 

Atharva Graphic Noval

Related News

8061

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery