Latest News :

நம்மில் ஒருவர், தமிழர்களின் தலைவர் - முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் பப்ளிக் ஸ்டார் பிறந்தநாள் வாழ்த்து
Monday March-14 2022

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 1) 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கொரோனா பரவலால் கடந்த இரண்டு வருடங்களாக பிறந்தநாளன்று தொண்டர்களை சந்திப்பதை தவிர்த்தவர், இந்த பிறநாளன்று தொண்டர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார். மேலும், தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் கொண்டாடும் முதல் பிறந்தநாள் என்பதால், திமுக தொண்டர்கள் பெரும் உற்சாகத்தோடு அவரை சந்தித்து வருகிறார்கள். அரசியல்  தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் அவருக்கு நேரிலும், தொலைபேசி, ஊடகம் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் மூலமாக வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

 

ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோரை தொடர்ந்து பிரபல நடிகரும், தொழிலதிபருமான பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

 

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”’உங்களில் ஒருவன்’ என்று தன்னடக்கத்துடன் மக்களின் தோள் மீது கைப்போட்டு வலம் வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களை மக்கள் எப்போது நம்மில் ஒருவராகவே பார்க்கிறார்கள். தமிழக முதல்வர்வாக அவர் பதவி ஏற்பதற்கு முன்பாகவே, மக்களுக்காக ஓய்வு இல்லாமல் ஒழைத்ததும், பல போராட்டங்கள் மூலம் மக்கள் உரிமைக்காகவும், தமிழகத்தின் தன்மானத்திற்காகவும் குரல் கொடுத்து வந்தார்.

 

முதல்வராக பதவி ஏற்றவுடன் கொரோனா என்ற கொடிய நோயில் இருந்து தமிழக மக்களை விரைவாக மீட்டெடுத்தவர், 3 வது அலை மீது இருந்த அச்சத்தைப் போக்கியதோடு, கொரோனா மீது மக்களுக்கு இருந்த அச்சத்தை தனது அயராத பணியின் மூலம் போக்கியிருக்கிறார்.

 

சட்டமன்ற தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் என தேர்தல் களத்தில் தொடர் வெற்றிகளை பெற்றாலும், ஓய்வு இல்லாமல் களத்தில் உழைத்து வரும் முதல்வர் மக்கள் மனதில் நிரந்தரமான  இடத்தை பிடித்துவிட்டார்.

 

மாநில அரசுகளிடம் இருந்து பறிக்கப்படும் உரிமைகளை மீட்டெடுப்பதில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருபவர், திராவிட இயக்கத்தின் மரபுகளை தன் தோள் மீது சுமந்து, தமிழர்களின் தன்மானத்துக்காக தொடர்ந்து போராடுபவர் எப்போதும் நம்மில் ஒருவராகவும், தமிழர்களின் தலைவராகவும் பல்லாண்டு வாழ வேண்டும், என்று வாழ்த்துகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Related News

8067

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery