Latest News :

25 ஆண்டுகளை கடந்த இசைப் பயணம் - மனம் திறந்த யுவன் சங்கர் ராஜா
Monday March-14 2022

இசையால் இளைஞர்களின் இதய துடிப்போடி கலந்திருக்கும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தனது சினிமா பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இந்த 25 ஆண்டுகளில் பல வெற்றி பாடல்களை கொடுத்து வெற்றிகரமான தனது இசைப் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கும் யுவன், தனது 25 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதமாக சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். 

 

இந்த நிலையில், யுவனின் 25 ஆண்டு இசை பயணத்தில் வெளியான பல வெற்றி பாடல்களை, அவருடன் பயணிக்கும் செந்தில்தாஸ் வேலாயுதம், சாம் பி.கீர்த்தனா, வேலு, சுஜாதா வெங்கட்ராமன். லேகா ஸ்ரீ, பேபி அதிரா உள்ளிட்ட  பல பாடகர்கள் இளையராஜா மற்றும் யுவன் பாடல்கள் கொண்ட இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய யுவன் சங்கர் ராஜா, “இவ்வளவு நாள் என்னோட பயணம் அனைத்தையும் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள் உங்கள் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கும், என்னோட வேலை செய்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசை கலைஞர்கள் எல்லோருக்கும் நன்றி. என்னுடன் பிரம்மா இருப்பார் இப்போது அவர் இல்லை அது வருத்தம் தான். என்னை இயக்கி கொண்டிருப்பது நீங்கள் தான். உங்களால் தான் நான் இந்த நிலையில் இருக்கிறேன். என்னுடன் இருக்கும் டீம் மிக நல்ல டீம்,  ராம்ஜி, கௌசிக், குரு எல்லோருக்கும் நன்றி. நா.முத்துக்குமாருக்கு நான் கொடுத்த இடம் வேறு,  அதை யாருக்கும் என்னால் தர முடியாது, அவர் மிகச்சிறந்த பாடலாசிரியர். அவருடன் நிறைய பாடல்களில் நிறைய வேலை பார்த்திருக்கிறேன். இப்போது விவேக், பா விஜய் என நிறைய பேருடன் இணைந்து பணியாற்றியுள்ளேன் என்னுடன் பயணித்த பாடலாசிரியர் அனைவருக்கும் நன்றி. 

 

Yuvan Shankar Raja

 

இந்த 25 வருடம் எப்படி போனது என்பதே தெரியவில்லை. முதல் முறை நான் மியூசிக் செய்த போது இப்போது மாதிரி சோஷியல் மீடியா இல்லை. பாடல் ஹிட்டாகிறதா என்றே தெரியாது. யாராவது வந்து சொன்னால் தான் தெரியும், ஒரு முறை அம்மாவுடன் வெளியே போன போது, சிலர் “அங்க பாரு.. யுவன் அம்மா என்றார்கள்” ஓகே நம்மை இசையமைப்பாளராக ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவை உண்மையில் நிறைய மிஸ் செய்கிறேன். இன்று கூட நிறைய அவரை பற்றி நினைத்தேன். ஆனால் அந்த இடத்தை கடவுள் புண்ணியத்தில் என் மகள் நிறைவு செய்கிறாள், கடவுளுக்கு நன்றி. இசைத்துறையில் நான் நிறைய பேருடன் வேலை பார்க்க நினைத்தேன், லதா மங்கேஷ்கர் உடன் வேலை செய்ய நினைத்திருந்தேன் முடியாதது வருத்தம் தான். நான் அதிகம் கேட்பது எப்போதும் அப்பா பாடல்கள் தான், வீட்டில் அவர் பாடல்கள் தொடர்ந்து பாடிக்கொண்டிருக்கும் போது என் மனைவி கூட திட்டுவார் ‘போதும்பா’ என்பார். ஆனால் எனக்கு அவர் பாடல்கள் தான் பிடிக்கும்.  நடிகர் விஜய் சாருடன் இருக்கும் ஜகதீஷ், ஒரு போட்டோ அனுப்பியிருந்தார். அதில் விஜய் சார் மகன், யுவனிசம் டீசர்ட் போட்டிருந்தார், பின்னர் விஜய் சாரை சந்தித்தபோது, என் மகன் உங்களோட பெரிய ஃபேன் என்றார், அது மிக மகிழ்ச்சியாக இருந்தது. நான் இந்தி குறித்து போட்ட டீசர்ட் குறியீடு கிடையாது,  உண்மையிலேயே  எனக்கு இந்தி தெரியாது அது தான், அதில் கருத்து எதுவும் இல்லை. நான் ஆன்லைனில் அதிகம் இருக்க மாட்டேன் என் மனைவி தான் இருப்பார் என்னைப்பற்றி விசயங்களை காட்டும் போது, சந்தோஷமாக இருக்கும். எனக்கு படத்தை விட ஃபேமிலி தான் சந்தோசம் தரும். அவர்களுடன் இருப்பதை தான் நான் அதிகம் விரும்புவேன். 

 

25 வருடங்கள் கடந்ததாக தெரியவில்லை, இன்னும் நிறைய தூரம் பயணிக்க வேண்டும் என நினைக்கிறேன். என் அம்மாவோட இழப்பு தான் இறைவன் பற்றிய தேடல் அதிகமாக காரணம்,  நானா இப்படி இசையமைக்கிறேன் என தேடும்போது ஒரு புள்ளியில் போய் நிற்கும் அல்லவா, அது தான் கடவுள் என நினைக்கிறேன். என் தயாரிப்பில் திரைக்கதை எழுதி வைத்திருக்கிறேன் அடுத்த வருடத்தில் நானே இயக்க போகிறேன்.  ரஜினி சார் படத்திற்கு நான் ரெடி. நிறைய சுயாதீன ஆல்பங்கள் செய்ய வேண்டும் நிறைய புது முயற்சிகள் செய்ய வேண்டும். இந்த பயணம் நல்லபடியாக தொடரும்  என நம்புகிறேன்.” என்றார்.


Related News

8069

‘தீயவர் குலை நடுங்க’ கதையை கேட்டு உடல் நடுங்கி விட்டது - ஐஸ்வர்யா ராஜேஷ்
Friday November-14 2025

அறிமுக இயக்குநர் தினேஷ் இலெட்சுமணன் இயக்கத்தில், அர்ஜுன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘தீயவர் குலை நடுங்க’...

’மிடில் கிளாஸ்’ பேசும் விசயம் முக்கியமானது - பிரபலங்கள் பாராட்டு
Wednesday November-12 2025

அறிமுக இயக்குநர் கிஷோர் முத்துராமலிங்கம் இயக்கத்தில், முனீஷ்காந்த், விஜயலட்சுமி கதையின் நாயகன், நாயகியாக நடித்திருக்கும் படம் ‘மிடில் கிளாஸ்’...

’யெல்லோ’ படம் மூலம் நிறைய கற்றுக்கொண்டோம் - பூர்ணிமா ரவி நெகிழ்ச்சி
Tuesday November-11 2025

யூடியுப் மூலம் அராத்தியாக பிரபலமான பூர்ணிமா ரவி, ’பிளான் பண்ணி பண்ணனும்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையானவர் தொடர்ந்து ‘அண்ணபூரனி’, ‘ட்ராமா’ போன்ற படங்களில் நடித்து பாராட்டு பெற்றார்...

Recent Gallery